இரண்டெல்லாம் இல்ல இனி ஒன்னு தான்… அப்போ இந்த வாரமாச்சும் இருக்குமா ஐயா..! பிக்பாஸ் ட்விஸ்ட்..!

Biggboss Tamil: தமிழ் பிக்பாஸ் சீசன் 7ன் இந்த வார எவிக்சன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஒரு புது முடிவும் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அப்போ இந்த வாரம் வேற லெவல் சம்பவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வார இறுதியில் கமல் எல்லாரையும் கழுவி ஊற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எல்லாருக்கும் ஒத்தடம் கொடுத்து இருப்பது ரசிகர்களுக்கு கடுப்பை கிளப்பி இருக்கிறது. பேச வேண்டிய எதையும் பேசாமல் மாயாவுக்கு ஒத்து ஊதிய போல பேசி விசித்ராவை தேவையில்லாமல் திசை திருப்பி இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் இறங்கி வருவார்.. விஜய் கார் கண்ணாடி ஏத்திட்டு போயிடுவார்!.. பத்திரிக்கையாளர் பேட்டி..

இப்படி கமல் மீதே நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. நிக்‌ஷன் விவகாரத்தில் கமல் எதுவும் வாய் திறக்காததும், வினுஷா குறித்து அவர் சொன்ன எந்த கமெண்ட்டுக்கும் பதிலடி கொடுக்காமல் விட்டது என புல்லி கேங் ஆதரவாளராகவே கமல் நடந்துக் கொள்கிறார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இதில் நடந்த ஆதரவான விஷயமாக பார்க்கப்படுவது அப்படி ஜெயிக்கணும் இப்படி ஜெயிக்கணும் எனப் பேசிக்கொண்டு இருந்தனர் மாயா டீம். அவர்கள் வாயடைக்கும் விதமாக சில நொடிகளில் கேப்டன் போட்டியை முடித்து விட்டார். இதனால் இந்த வார கேப்டனாகவும் மாறி இருக்கிறார்.

இதையும் படிங்க: வெற்றிமாறனும் விஜயும் இணையனும்னா இதுதான் ஒரே வழி!.. இது நடந்தா ஆச்சர்யம்தான்!.

அதனால் தினேஷ் என்னென்ன வச்சி செய்ய போகிறார் என யோசித்து கொண்டு இருந்த நிலையில் இந்த வாரம் இரண்டு வீடெல்லாம் இல்லை ஒரே வீடு தான் என அதிரடியாக அறிவித்து இருக்கிறார் பிக்பாஸ். இதனால் பழையப்படி வீட்டு வேலைகளுக்கு டீம் பிரிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த வாரம் பிக்பாஸ் டாஸ்க் எதுவாது வலுவாக வைத்திருப்பாரோ? அதனால் தான் வீட்டை ஒன்றாக்கி இருக்கிறார் எனவும் ரசிகர்கள் பேசி வருகின்றனர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Related Articles

Next Story