Biggboss Tamil: பொண்டாட்டிக்கிட்ட கேட்டாவது வந்து இருக்கலாம் ப்ரோ… பிக்பாஸ் வீட்டுக்குள் காணாமல் போன போட்டியாளர்…

by Akhilan |
biggboss tamil sathya
X

biggboss tamil sathya

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ரசிகர்களை மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கும் நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அதைவிட ரசிகர்களுக்கு கடுப்படிக்கும் விதமாக நடந்து வருகின்றனர்.

தமிழ் பிக் பாஸ் சீசன் 8 ரசிகர்களுக்கு இந்த முறை பெரிய அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. முதல் பாலிலே அவுட் என்பது போல வாழ்க்கை முழுவதும் கேமரா முன்னால் நிற்கும் சின்னத்திரை நடிகர்களை அதிகமாக உள்ள எடுத்து வந்ததே இந்த சீசன் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.

இதையும் படிங்க: Jailer 2: ‘ஜெயிலர் 2’வில் ரஜினியின் லுக் வேற லெவல்ல இருக்க போது… கொடுத்த அப்டேட் அப்படி

உள்ளே வந்த ஒன்று அல்லது இரண்டு போட்டியாளர்களை தவிர மற்ற அனைவருமே விஜய் டிவியின் சின்னத்திரை பிரபலங்கள் தான். இதனால் அவர்கள் கண்டிப்பாக நடிக்க தான் செய்வார்கள். அது ரசிகர்களுக்கு பெரிய அளவில் கோபத்தை தான் ஏற்படுத்தியது. இதனால் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி பெரிய அளவில் அடி வாங்கி வருகிறது.

இதனால் சமீபத்தில் கிரியேட்டிவ் டீம் மாற்றப்பட்ட நிலையில் தற்போது டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் போட்டியாளர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டை மீறி சண்டையிட்டு கொள்வதையும் பார்க்க முடிகிறது. இன்றைய ப்ரோமோவில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே வந்த ராணவ் ஜாக்லின் மற்றும் சௌந்தர்யாவிடம் எக்கு தப்பாக பேசி சண்டையிட்டு வருகிறார்.

இவர்கள் சண்டை தற்போது ப்ரோமோக்களாக வெளியாகி ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வளவு சண்டை நடந்தும் கூட பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளரான சத்யா குறித்து வீடியோக்கள் கூட 24 மணி நேர லைவில் காட்டப்படுவதில்லை.

எபிசோட்களிலும் அவர் இடம்பெறுவதில்லை என்பதுதான் உண்மை. இவருடைய மனைவி என் எஸ் கே ரம்யா தமிழ் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார். அவரும் இவர் போலவே இருக்க இடம் தெரியாமல் ஒரு சில வாரங்களிலேயே வெளியேறினார். இந்த சீசன் தொடக்கத்திலேயே தன்னை போல் இருக்கக் கூடாது என கணவருக்கு இவர் அட்வைஸ் செய்து அனுப்பினார்.

இதையும் படிங்க: சிவராஜ்குமாருக்கு இப்படி ஒரு நிலைமையா? அப்போ ஜெயிலர் 2 நிலைமை?

Sathya

Sathya

ஆனால் அதைத் தொடர்ந்து மனுஷரை உள்ளே காணப்படவில்லை. மிச்சர் திங்கலாம் அதுக்குன்னு ஆளே இல்லாம போக கூடாது என ரசிகர்கள் தற்போது அவரை நீங்க ரொம்ப டம்மி பாவா என கலாய்த்து வருகின்றனர். இது தொடர்ந்தால் சத்யா விரைவில் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story