புதுவிதமான டிராமாவால இருக்கு,.. பிக்பாஸ் தர்ஷன் வீட்டின் முன் தகராறு… என்ன நடந்தது?

tharshan
Biggboss Tharshan: பிரபல விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர் தர்ஷன். இவர் இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி. இதில் எட்டு சீசன்கள் முடிந்துவிட்டாலும் மூன்றாவது சீசன் இன்னமும் ரசிகர்களிடம் பேவரிட் லிஸ்ட்டில் தான் இருக்கிறது. அதில் பாய்ஸ் டீமில் இருந்தவர் தர்ஷன்.
நிகழ்ச்சியில் இவருக்கு ரசிகர்கள் வரவேற்பு நிறைய இருந்தது. ஒரு கட்டத்தில் பட்டத்தை வெல்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷெரீன் மீதானா திடீர் அக்கறையால் இவர் ஓட்டு அவருக்கு விழுக பைனல் செல்லாமல் வெளியேறினார்.
பின்னர், இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் காதல் என கிசுகிசுப்புகள் இருந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் நிச்சயம் வரை சென்றுள்ளனர். திடீரென கிடைத்த புகழால் தர்ஷன் சனம் ஷெட்டியை கழற்றிவிட்டார். தற்போது இருவரும் பிரிந்தும் விட்டனர்.

தர்ஷன் தன்னுடைய சினிமா கேரியரில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் தர்ஷன் பெயர் திடீரென சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. அவர் வீட்டின் முன்னர் நீதிபதியின் மகன் ஒருவர் காரை நிறுத்தி சென்றுள்ளார். தர்ஷன் காரை எடுக்க சொல்ல இரு தரப்புக்கு வாக்குவாதம் நடந்து அடித்து கொண்டதாக கூறப்படுகிறது.
தர்ஷன் அசிங்கமாக பேசி அடித்தார் என நீதிபதி மகன் தரப்பும், அவர்கள் டீயை மூஞ்சில் ஊத்தினார்கள் என தர்ஷன் தரப்பும் மாற்றி மாற்றி கண்ணீர் வடித்து பேட்டி கொடுத்து இருக்கிறது. ஆனால் தற்போது தர்ஷனுக்கு ஓரளவுக்கு ஆதரவு வருகிறது.
ஆனால் நீதிபதியின் மகன் எனக் கூறப்படும் அந்த நபர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது. அவர் அழுவதும் பேசுவதும் நாடகம் போல இருப்பதாக தொடர்ச்சியாக கருத்துகள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இதில் மருத்துவமனையில் அடித்ததாக அவர் சிகிச்சையில் பேட்டி கொடுப்பது தான் உச்சபட்ச ஹைலைட்டே.