Biggboss Tamil 8: நாமினேஷனில் காதலர்... டைட்டில் 'வின்னர்' செஞ்சதை பாருங்க!

by சிவா |   ( Updated:2024-11-19 07:28:31  )
archana
X

#image_title

பிக்பாஸ் வீட்டின் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சின்னத்திரை நடிகரும், பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னருமான அர்ச்சனாவின் காதலர் அருண் பிரசாத் வந்துள்ளார். ஆரம்ப கட்டத்தில் கொஞ்சம் மந்தமாக ஆடிய அருண் தற்போது ஓரளவு சுதாரித்துக் கொண்டு விளையாடி வருகிறார்.

கடந்த வாரங்களில் நாமினேஷன் பட்டியலில் வந்தாலும் அவரை தொடர்ந்து பிஆர் வேலை பார்த்து அர்ச்சனா காப்பாற்றி வருகிறார். அருணை, விஜய் சேதுபதி கிண்டல் செய்ததற்கு சமூக வலைதளத்தில் கொந்தளித்து அவருக்கே லேசாக ஜெர்க் கொடுத்து இருந்தார். அருண் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் அருண்-அர்ச்சனா திருமணம் நடைபெறும் என தெரிகிறது.

இதையும் படிங்க: நானும் ரவுடிதான் படத்தில் நான் நடிக்க முடியாது.. அடம் பிடித்த நடிகரிடம் கெஞ்சிய விக்னேஷ் சிவன்

இந்தநிலையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அருண் மீண்டும் இடம்பிடித்து இருக்கிறார். இதைப்பார்த்த அர்ச்சனா காரில் இருவரும் ஜாலியாக டூர் சென்றபோது எடுத்த வீடியோ ஒன்றினை பகிர்ந்து இருக்கிறார். அதில் இருவரும் இணைந்து, 'கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க' என ஜாலியாக பாடுவது போல காட்சிகள் இருக்கின்றன.

இதன்வழியாக இதுவரை லேசுபாசாக இருந்த காதல் விஷயத்தை பொதுவெளியில் அர்ச்சனா போட்டு உடைத்துள்ளார். இதன் மூலம் தன்னுடைய ஆர்மி ரசிகர்கள் அருணுக்கு வாக்களித்து அவரை காப்பாற்றி விடுவார்கள் என்பது அர்ச்சனாவின் திட்டமாக இருக்கிறது. வீடியோ பார்த்த ரசிகர்கள், 'அருணுக்காக ரொம்ப இறங்கி வேலை பாக்குறீங்க போல' என அர்ச்சனாவை கிண்டலடித்து வருகின்றனர்.

டைட்டில் வின்னர் ஆக்காம விட மாட்டாங்க போல!..

Next Story