ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலம் ஒருவர் போட்டியாளராக உள்ளே செல்லவிருக்கிறார். அதுகுறித்து பார்ப்போம்.
கடந்த 2017-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. வருடாவருடம் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறிக்கொண்டே செல்வதால் போட்டிக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே இந்த நிகழ்ச்சிக்கு செல்லப்போகும் போட்டியாளர்கள் குறித்த யூகங்கள் அடிபடுவது வாடிக்கையாகும்.
அந்தவகையில் இந்தாண்டு பிக்பாசிற்கு செல்லும் போட்டியாளர்களின் பெயர்கள் அடிபட ஆரம்பித்து இருக்கின்றன. அதுவும் இந்த ஆண்டு விஜய் சேதுபதி நிகழ்வை தொகுத்து வழங்கவிருக்கிறார். இதனால் மேலும் சுவாரஸ்யம் கூடியுள்ளது.
இந்தநிலையில் போட்டியாளர்களில் ஒருவராக தயாரிப்பாளர் மற்றும் நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் சந்திரசேகரன் நிகழ்ச்சிக்கு செல்லவுள்ளதாக தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் பேட்டி மேன் என்ற பெயரில் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து ரவீந்தர் விமர்சனம் செய்து வந்தார்.
தற்போது அவரே வீட்டுக்கு உள்ளே போவதால் பரபரப்புகளுக்கு பஞ்சமிருக்காது என்பது இப்போதே தெரிகிறது. கடந்த வருடம் போல இந்தாண்டும் பிக்பாஸ் அக்டோபர் முதல் வாரம் தொடங்கலாம் என கூறப்படுகிறது.
ஒருபுறம் புதிய தொகுப்பாளர் மறுபுறம் கண்டெண்ட்டுகளுக்கு பஞ்சமில்லாத போட்டியாளர்கள் என இந்த வருடம் ஆரம்பத்திலேயே நிகழ்ச்சி மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் சேதுபதி தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியில் சிக்ஸர் அடிப்பாரா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…