Biggboss Tamil: விஜய் டிவி ப்ராடக்டை தூக்கி அடித்த பிக் பாஸ் குழு… எதிர்பாராத இந்த வார எலிமினேஷன்!

by Akhilan |
Biggboss Tamil: விஜய் டிவி ப்ராடக்டை தூக்கி அடித்த பிக் பாஸ் குழு…  எதிர்பாராத இந்த வார எலிமினேஷன்!
X

Biggboss Tamil

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் இந்த வார இறுதியில் எதிர்பாராமல் விஜய் டிவி பிரபலம் ஒருவர் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய் சேதுபதியின் தக்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் வெளியேறிய பிறகு அந்த இடத்தை நடிகர் விஜய் சேதுபதி பிடித்து விட்டார். ஆனால் பொறுமையாக சில இடங்களில் கண்ணியமாக தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் தற்போது ரசிகர்களால் மிஸ் செய்யப்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க: Amaran: ரஜினி படத்தையே ஓவர்டேக் பண்ண அமரன்?!… 10 நாளில் எகிறிய எஸ்கே-வின் மார்க்கெட்!…

நடிகர் விஜய் சேதுபதி தொடக்கத்தில் இருந்தே போட்டியாளர்களை தலையில் தட்டி வைத்து உட்கார வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் ஆரம்ப முதலே ரசிகர்கள் விளையாட்டாக நினைக்கும் விஷயங்களை கூட முகத்தில் அடித்தார் போல பேசி விடுவதை விஜய் சேதுபதி செய்து வருகிறார்.

டிஆர்பியின் பாதாளத்தில் பிக்பாஸ்: விஜய் சேதுபதியின் பேச்சுக்கள் சில இடங்களில் வெறுப்பை சம்பாதித்தாலும் பல இடங்களில் அது ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனால் வார இறுதி எபிசோட்கள் மட்டுமே தற்போது ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டுகளை பெற்றுள்ளது.

ஆனால் வார நாட்களில் போட்டியாளர்கள் எந்தவித கண்டெண்டும் கொடுக்காமல் பெரிய அளவில் நிகழ்ச்சியை சுவாரசியமாக எடுத்து செல்லாமல் தான் தற்போது வரை இருந்து கொண்டு வருகின்றனர். இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: Delhi ganesh: 50 ஆண்டு கால நண்பர்…. டெல்லிகணேஷோட கனவே இதுதானாம்…. பிரபலம் சொன்ன தகவல்

இதில் கடந்த வாரம் மட்டுமே ஓரளவு ரசிகர்களிடம் சில போட்டியாளர்கள் பாராட்டுகளை பெற்றுள்ளனர். அவர்கள் வாழ்வில் பாதித்த கடந்து வந்த பாதை டாஸ்க் பலருக்கு ஆச்சரியமாகவும் சிலருக்கு அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது.

எலிமினேஷன் அப்டேட்: இருந்தும் இந்த வாரம் பெரிய அளவில் சுவாரசியம் இல்லாததால் யார் வெளியேறுவார் என்ற கேள்வி பலரிடமும் இருந்தது. அந்த வகையில் இந்த வாரம் ஹாட் சீட்டில் ஆனந்தி மற்றும் சுனிதா இருவரும் அமர்ந்திருந்தனர். அதில் எதிர்பார்க்காத வகையில் விஜய் டிவியின் ப்ராடக்ட்டான சுனிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Sunita Gogoi

இருந்தும் இன்றைய எபிசோடை பார்த்தால் மட்டுமே இது குறித்த முழு தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் எந்த எலிமினேஷனும் இல்லாத காரணத்தால் இந்த வாரம் கண்டிப்பாக ஒருவர் வெளியேறலாம் அல்லது இருவர் வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: Salaar 2: அடேங்கப்பா!… கொரியன் நடிகருடன் இணையும் பிரபாஸ்… முரட்டு சம்பவமாக இருக்கும் போலயே!…

Next Story