Biggboss Tamil: மகாராஜா படத்தில் இருந்து வெளியில வாங்க VJS… சாச்சனாவுக்கு இப்படியா சொம்பு தூக்குவீங்க!..

by Akhilan |   ( Updated:2024-11-24 09:41:10  )
Biggboss Tamil
X

vijay sethupathi sachana

Biggboss Tamil: பிக்பாஸ் தமிழில் இந்த வாரமும் வெளியான புரோமோக்களில் விஜய் சேதுபதி தொடர்ச்சியாக சாச்சனாவுக்கு சப்போர்ட்டாக பேசி வருவது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8ல் விஜய் சேதுபதி தொகுப்பாளராக உள்ளே வந்தார். அவர் முதலில் இருந்தே அதிரடி காட்டி வந்ததால் நிகழ்ச்சியின் டிஆர்பி பத்திக்கும் என பரவலாக எண்ணம் இருந்தது. ஆனால் அதில் கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லாமல் குறைந்து கொண்டே செல்கிறது.

இதையும் படிங்க: விஜய் டிவியில் இருந்து வந்தா எல்லாரும் சிவகார்த்திகேயன் ஆயிட முடியாது?!.. ஆர்.ஜே பாலாஜி ஓபன் டாக்!..

வார இறுதி நாட்கள் கூட டல்லடிக்க தொடங்கிவிட்டது. இதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி அவருடைய மகாராஜா படத்தில் மகளாக நடித்த சாச்சனாவுக்கு வரிந்து கட்டிக்கொண்டு சண்டை செய்வது ஒரு பக்கம் பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது. தப்பு அவர் மீது இல்லை என தொகுப்பாளர் ஆதரவாக பேசுவது இப்படி ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு சரியாக இருக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

நிகழ்ச்சிக்குள் உள்ளே வந்த 24 மணிநேரத்துக்குள் எலிமினேட் செய்யப்பட்டார் சாச்சனா. அவருக்காக பலரும் ஆதரவாக கமெண்ட்களை தெறிக்கவிட்டனர். ஆனால் மீண்டும் உள்ளே வந்த சாச்சனா தேவையே இல்லாமல் பேசிக்கொண்டு இருப்பதும் வைரலாக பரவியது. இதனால் அவருக்கு நெகட்டிவிட்டி அதிகமாகி வருகிறது. இந்த வாரம் கூட பெண்கள் அணி வெற்றிபெற்ற பணத்தில் மளிகை சாமான்களை வாங்க சென்றனர்.

இதையும் படிங்க: இப்படியெல்லாம் பேசாதீங்க?!.. அவர் அற்புதமான மனிதர்!… ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு!…

Next Story