Biggboss Tamil: உள்ளே வந்த வைல்ட் கார்ட் இதுக்குதான் யூஸோ… இந்த வார எலிமினேஷனில் சிக்கியது இவர்தான்…
Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் சீசன் 8ல் இந்த வாரம் எலிமினேஷன் ஆகி இருக்கும் போட்டியாளர் யார் என்ற தகவலால் ரசிகர்கள் கடுப்பாகி இருக்கின்றனர்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பரபரப்பே இல்லாமல் புஸ்ஸாக சென்று கொண்டு இருக்கிறது. கமல்ஹாசன் வெளியேறிய பின்னர் விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக உள்ளே வந்தார். மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: விஜய் டிவியில் இருந்து வந்தா எல்லாரும் சிவகார்த்திகேயன் ஆயிட முடியாது?!.. ஆர்.ஜே பாலாஜி ஓபன் டாக்!..
தொடர்ச்சியாக அவர் போட்டியாளர்களை தக் லைஃப் கேள்விகளால் காலி செய்கிறேன் என அசிங்கப்படுத்து போல நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுமட்டுமல்லாமல் அவர் சாச்சனாவுக்கு ஓவராக சொம்பு தூக்கி சப்போர்ட் செய்வதும் பலருக்கு கடுப்பை கிளப்பி இருக்கிறது.
ஏற்கனவே உள்ளே வந்திருக்கும் சீரியல் பிரபலங்களால் பெரிய அளவு பரபரப்பு இல்லை. தினமும் கேமரா முன்னர் நடித்தவர்கள் இந்த 100 நாட்களில் என்ன மாறிவிட போகிறார்கள் இவர்களை எதற்கு உள்ளே அழைத்து வந்தீர்கள் எனவும் ரசிகர்கள் கடுப்படித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இப்படியெல்லாம் பேசாதீங்க?!.. அவர் அற்புதமான மனிதர்!… ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு!…
இவங்களை அழைத்து வந்ததே மற்ற போட்டியாளர்களை காப்பாற்றதானா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதே போல சென்றால் நெகட்டிவ் விமர்சனங்களை குவிக்கும் ரானவ் மற்றும் சும்மாவே இருக்கும் போட்டியாளர் சிவகுமார் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.