பிக்பாஸ் தமிழ் சீசன் 8 பிளாப்பு… அடுத்த டார்கெட் அல்டிமேட் சீசன் 2.. எப்போ தொடங்குது தெரியுமா?
Biggboss Tamil8: தமிழ் பிக்பாஸ் சீசன் 8 முடிந்து இருக்கும் நிலையில் தற்போது ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 சமீபத்தில் முடிந்தது. முதல் முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். ஆரம்பம் முதலே தன்னுடைய தனி பாணியில் அடுத்து ஆட இதுவும் நல்லா இருக்கே என ரசிகர்கள் வாய் பிளந்தனர். தன்னுடைய ஸ்டைலை யார் சொன்னாலும் கடைசி வரை மாற்றிக்கொள்ளாமல் கடந்தார்.
இருந்தும் இந்த சீசன் பிக்பாஸ் தமிழ் பெரிய அளவு ஹிட் கொடுக்கவில்லை. எப்போதும் போல இதை சரி செய்ய தற்போது பிக்பாஸ் டீம் அடுத்தக்கட்ட முடிவை எடுத்து இருக்கிறது. இப்படியே விடும் பட்சத்தில் பிக்பாஸ் ரசிகர்களை இழக்க நேரிடும்.
இதனால் பிக்பாஸ் தமிழ் ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள பிளான் போட்டுள்ளனர். அதன்படி உடனே பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது. அந்த இடைவேளையில், மீண்டும் அடுத்த சீசன் பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 2 தொடங்கப்பட இருக்கிறதாம்.
அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெரிய அளவில் ரீச் வாங்கிய போட்டியாளர்கள் மீண்டும் அடுத்த வாய்ப்பாக உள்ளே வந்து விளையாடுவார்கள். 60 முதல் 80 நாட்களுக்கு மட்டுமே இந்த நிகழ்ச்சி ஓடிடியில் மட்டும் ஒளிபரப்பப்படும்.
முதல் முறையாக அல்டிமேட்டில் இருந்து தான் 24 மணி நேர லைவ்வும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் தற்போது இரண்டாவது சீசனில் நல்ல போட்டியாளர்களை பல சீசன்களில் இருந்து மீண்டும் உள்ளே இறக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் ரசிகர்கள் மீண்டும் நிகழ்ச்சியை காண நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை மீண்டும் சிலம்பரசனே தொகுத்து வழங்கவும் வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.