பிக்பாஸ் சீசன் வரலாற்றில் முதல்முறையாக… பணத்துடன் இதும் கிடைக்கும்… ஆண் போட்டியாளர்களின் சம்பவம்
Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் முதல் முறையாக பணப்பெட்டி டாஸ்க்கை கிரியேட்டிவ் டீம் வித்தியாசம் ஒன்றை கையாண்டு இருக்கின்றனர். இது தற்போது வித்தியாசமாக பார்க்கப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் சீசன் 8 இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. மற்ற சீசன்களை விட இந்த சீசன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சியின் நடுவில் மாற்றப்பட்ட கிரியேட்டிவ் டீம்.
கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போது இந்த நிகழ்ச்சி அவ்வளவு தான் என ரசிகர்கள் கவலை அடைந்தனர். ஆனால் உள்ளே வந்த விஜய் சேதுபதி தன்னால் முடிந்தவரை நிகழ்ச்சியை வித்தியாசமாக கொண்டு செல்ல முடிவெடுத்தார்.
முதல் நாள் இருந்து போட்டியாளர்களை இங்கு தட்டி வைக்க வேண்டுமோ அதே இடத்தில் உடனே தட்டி வைக்க தொடங்கினார். முதலில் இது பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதன் பின்னர் ரசிகர்களின் மனநிலையை விட விஜய் சேதுபதி கையாளுவது போலவே பார்க்கப்பட்டது.
உள்ளே வந்த போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் நடுவில் ஆறு வைல்ட் கார்டு போட்டியாளர்களும் உள்ளே வந்து நிகழ்ச்சியை அதிகமாகவே போர் அடிக்க வைத்தனர். இதனால் கடந்த நான்கு வாரங்களாக டபிள் எலிமினேஷன்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் அருண் பிரசாத் மற்றும் தீபக் இருவரும் வெளியேறினர். தற்போது பைனலிஸ்ட்டுகளாக வீட்டிற்குள் ரயான், முத்து, விஜே விஷால், பவித்ரா, ஜாக்குலின் மற்றும் சவுந்தர்யா உள்ளே இருந்துவருகின்றனர். இதில் டைட்டிலை வெல்ல முத்துவிற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பணப்பெட்டி டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. பொதுவாக வைக்கப்படும் பணத்தின் அளவு ஓரளவுக்கு அதிகரித்ததும் போட்டியாளர்கள் அதை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். ஆனால் இந்த முறை அதிலும் மாற்றம் கொண்டு வந்து இருக்கிறது பிக் பாஸ் டீம்.
பெட்டியை எடுத்துக்கொண்ட போட்டியாளர்களும் உள்ளே இருக்கலாம். ஆனால் பெட்டி எடுப்பது அவ்வளவு சுலபமில்லை. கொடுக்கப்பட்ட நொடிக்குள் வீட்டில் இருந்து சில மீட்டர் தள்ளி பெட்டி வைக்கப்பட்டு இருக்கும். அங்கு ஓடிச்சென்று எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் வர வேண்டும்.
டைமர் முடிவதற்குள் வீட்டிற்குள் வராத போட்டியாளர்களுக்கு அங்கேயே அவர்கள் வாய்ப்பும் முடிக்கப்பட்டு விடும். வீட்டின் கதவு உடனடியாகவும் மூடப்படும். இதில் முதலாக முத்துக்குமரன் 50 ஆயிரத்திற்காக பெட்டியை எடுக்க ஓடினார். ஆனால் ஆச்சரியமாக மூன்று நொடிகள் இருப்பதற்கு முன்னாகவே வீட்டுக்குள் வந்து 50 ஆயிரத்தை தன் கணக்கில் சேர்த்து இருக்கிறார்.
தொடர்ந்து ரயான் இரண்டு லட்சத்திற்காக ஓடி பெட்டியை எடுத்து வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து இது போல பெட்டி வைக்கப்படுமா இதிலிருந்து ஒரு போட்டியாளர் வெளியேறுவாரா என்பதை அடுத்த நாளில் தெரிந்துக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.