பிரித்விராஜ் என்னை ஏமாத்தி விட்டார்... கதறிய பிக்பாஸ் தமிழ் 8 பெண் போட்டியாளர்

biggboss tamil8
Biggboss Tamil: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் தொடர்ச்சியாக நடந்துக்கொண்டு இருக்கிறது. இதில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் வந்து அவர்கள் வாழ்வில் வேறு லெவலுக்கு சென்று கொண்டு தான் இருக்கின்றனர்.
15 க்கும் அதிகமான பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாள் இருக்க வேண்டும். எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் அவர்களை 60க்கும் அதிகமான கேமரா கவனித்து கொண்டு இருக்கும். முதல் சீசன் அறிவிக்கப்பட்ட போது இந்தியில் 10 சீசன்கள் முடிந்து இருந்தது.

இதனால் தமிழ் ரசிகர்களிடம் இந்த நிகழ்ச்சி ஏற்கனவே பிரபலமாக இருந்த நிலையில், தமிழ் பிரபலங்களை வைத்து இது எவ்வாறு இருக்கும் என்ற ஆர்வம் தொத்திக் கொண்டது. அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கு வந்த கமல்ஹாசன் மேலும் நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பை கூட்டினார்.
இந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய முதல் சீசன் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஓவியாவிற்காக ரசிகர்கள் ஆர்மி தொடங்கிய சம்பவம் எல்லாம் நடக்க ஆனால் அவரால் டைட்டிலை வெல்ல முடியாமல் பாதியிலேயே வெளியேறும் நிலை உருவானது. இதைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் ஓரளவு களைகட்ட மூன்றாவது சீசனில் மீண்டும் நிகழ்ச்சிக்கு வரவேற்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களில் முதல் சில வாரங்களிலேயே வெற்றியாளர் நிர்ணயிக்கப்பட்டு விட நிகழ்ச்சி இன்னமும் சூடு பிடித்தது. ஆனால் கடந்த இரண்டு சீசன்களாக நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. அதிலும் கடந்த பிக் பாஸ் எட்டாவது சீசன் கிட்டத்தட்ட பி ஆர் மட்டுமே வைத்து நடத்தப்பட்டது போல பெரிய அளவில் ரசிகர் இடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதில் ஒரு போட்டியாளராக வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வந்தவர் வர்ஷினி. ஆனால் இவரால் சில வாரம் மட்டுமே தாக்கு பிடிக்க முடிய எலிமினேஷன் ஆகி வெளியேறினார். இருந்தும் தன்னுடைய எக்ஸ் வலைதளம் மூலம் தொடர்ந்து தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் வர்ஷினி தன்னுடைய பேட்டி ஒன்றில், மை ஸ்டோரினு ஒரு மலையாள படம் அதில் நான் நடித்திருந்தேன். ஆனால் எடிட்டிங்கில் என் காட்சிகள் மொத்தமாக நீக்கப்பட்டு விட்டது. இது தெரியாம படம் பார்க்க அப்பாவை அழைத்து சென்றேன்.
ஆனால் என் காட்சியே வரவில்லை. சரி கிரெடிட்ல பெயர் வருமே அதையாவது காட்டலாம் என காத்திருந்தேன். அதுக்கூட நடக்கவில்லை. அங்கையே உட்கார்ந்து அழுதுவிட்டேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். 2018ம் ஆண்டு வெளியான இப்படத்தில் பிரித்விராஜ் மற்றும் பார்வதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.