பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியேறப்போவது யார் தெரியுமா?...

by சிவா |   ( Updated:2021-10-17 01:53:03  )
biggboss
X

தமிழில் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் இந்த முறையில் நடிகர் கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். வழக்கமாக 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வார்கள். இந்த முறை 18 பேர் சென்றனர்.

இதில், திருநங்கை நமீதா மாரிமுத்து கடந்த வாரம் திடீரென வெளியேறி விட்டார். சொந்த பிரச்சனைகள் எனவும், உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் வெளியேறிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த வாரம் முதல் எவிக்‌ஷன் நடைபெறவுள்ளது. எனவே, இது தொடர்பான புரமோ வீடியோ இன்று காலை முதல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், இந்த வாரம் நடியா சாங் வெளியேற வாய்ப்பிருப்பதாக நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

எப்படியும் யார் வெளியேறப்போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்து விடும்.

Next Story