பிக்பாஸ் விஷ்ணுவுக்கு அடித்த லாட்டரி! காத்திருப்புக்கு கிடைச்ச பலன்.. என்ன மேட்டர் தெரியுமா?
Biggboss Vishnu: பிக்பாஸ் மூலம் அமுல்பேபியாக அறியப்பட்டவர் சின்னத்திரை நடிகர் விஷ்ணு. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக பல சீரியல்களில் நடித்த விஷ்ணு முதன் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஆஃபிஸ் சீரியலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த சீரியல் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படி தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த விஷ்ணு வெள்ளித்திரை பக்கமும் காலெடி எடுத்து வைத்தார். களரி, அத்தியாயம் 6 போன்ற படங்களில் துணை நடிகராக நடித்தார்.
இதையும் படிங்க: ரஜினியை மரியாதை இல்லாமல் ‘வாடா’ என அழைத்த அறிமுக நடிகை!.. பதட்டமான படப்பிடிப்பு!..
இதனை தொடர்ந்துதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ஆரம்பத்தில் நன்கு விளையாடிக் கொண்டிருந்த விஷ்ணு இடையிடையே அவர் பார்த்த வேண்டாத வேலையால் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். அதன் பிறகு அவருக்கென ஒரு கேங்க் அமைந்து கடைசி வார நிகழ்ச்சியின் போது மக்கள் அவரை விரும்ப ஆரம்பித்தனர்.
இதில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த அர்ச்சனா முதல் பரிசையும் மணிச்சந்திரா இரண்டாம் இடத்தையும் மாயா மூன்றாவது இடத்தையும் தினேஷ் நான்காவது இடத்தையும் விஷ்ணு ஐந்தாவது இடத்தையும் பெற்றனர். இவர்களில் விஷ்ணுவுக்குத்தான் இப்போது ஒரு பம்பர் ஆஃபர் வந்திருக்கிறது.
இதையும் படிங்க: விஜய் ஒன்னும் லாரன்ஸ் இல்ல! சாய்பாபா கோயில் இவர் கட்டியதே இல்லையாம்.. அப்புறம் எதுக்கு இந்த வேஷம்
தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘சி லா சோவ்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை பெற்ற படமாகும். இந்த படத்தில் ரீமேக்கில் தான் விஷ்ணு நடிக்க இருக்கிறார். இது தெரிந்து பலரும் விஷ்ணுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.