முதல் தென்னிந்திய நடிகை... 90 நாட்கள் சம்பவம்... இறுதி வாரத்தில் ஸ்ருதிகா அர்ஜூனுக்கு நடந்த அநீதி?

by Akhilan |
shrutika arjun
X

shrutika arjun

Shrutika Arjun: ஹிந்தி பிக் பாஸ் சீசன் 18 வெற்றிகரமாக விளையாட வந்த ஸ்ருதிகா அர்ஜுன் குறித்து தற்போது அதிர்ச்சியான அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்து இருக்கிறது.

ரசிகர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மீது எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டு தான் இருக்கும். தற்போது தென்னிந்தியாவில் எல்லா மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தாலும் இதற்கு அஸ்திவாரம் போட்டது என்னவோ ஹிந்தி பிக் பாஸ் தான்.

தமிழ் பிக் பாஸ் சீசன் 8 தொடங்கிய அதே வாரத்தில் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 18ம் தொடங்கப்பட்டது. இதில் முதல்முறையாக தென்னிந்தியாவிலிருந்து நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் உள்ளே சென்றார். தன்னுடைய நடிப்பில் இதுவரை நான்கு திரைப்படங்கள் வந்திருப்பதாகவும் அத்தனையும் பக்கா பிளாப் என அவர் பேசிய முதல் நாளிலிருந்து ரசிகர்களை ஈர்க்கத் தொடங்கினார்.

இதற்கு முன்னர் தமிழில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய கள்ளம் கபடம் இல்லாத சேட்டையால் ரசிகர்களை கவர்ந்ததால் ஹிந்தி தெரியாதவர்கள் கூட ஹிந்தி பிக் பாஸை பார்க்க தொடங்கினர். தேவையான நேரத்தில் கோவப்பட்டு, மற்ற நேரத்தில் சேட்டை செய்து பலரைக் கவர்ந்தார்.

குடும்பங்கள் வீட்டிற்குள் வந்த கடந்த வார டாஸ்க்கில், ஸ்ருதிகாவின் கணவர் அர்ஜுன் உள்ளே வந்து இருவரும் சந்தித்துக் கொண்ட தருணம் பலரிடமும் வைரலாக பரவியது. 90 நாட்களைக் கடந்து ஸ்ருதிகா அர்ஜூன் பலமான போட்டியாளராக விளையாடி வந்தார்.

அடுத்த வாரம் ஃபைனல் நடக்க இருக்கும் நிலையில், இந்த வாரம் மூவர் மட்டுமே நாமினேஷனில் இருந்தனர். இதில் ஸ்ருதிகா அர்ஜுனும் இடம்பெற்றிருந்தார். அவருடன் இருந்த மற்ற பிரபலங்கள் ஹிந்தியில் பிரபலம் என்பதால் இது ஸ்ருதிகாவிற்கு கடுமையான நாமினேஷனாக இருந்தது.

தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் தொடர்ச்சியாக ஸ்ருதிகாவுக்கு வாக்கு கேட்டு வீடியோ வெளியிட்டு வந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக நடந்த மிட் வீக் எவிக்ஷனில் மக்களின் வாக்கு அடிப்படையில் ஸ்ருதிகா வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பெரிய பிரபலமாக இல்லாமல் தோல்வி நடிகையாக இருந்தாலும் தன்னுடைய டிவி புகழை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளே சென்ற ஸ்ருதிகா 90 நாட்கள் தன்னுடைய ஆதிக்கத்தால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவிட்டு தான் வெளியேறி இருப்பதால் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இருந்தும் கடைசி வாரத்தில் கூட பெரிய அளவில் கன்டென்ட் கொடுக்காத போட்டியாளர்கள் உள்ளே இருக்கும்போது ஸ்ருதிகாவை வெளியேற்றுவது அநீதி என்றும், தமிழ் பெண் என்பதால் அவரை இறுதிவாரத்திற்குள் அழைத்துச் செல்லக்கூடாது என்பதற்கே இந்த நாடகம் எனவும் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

Next Story