Cinema News
ரஜினியின் கூலி படத்தில் இணைந்த பிகில் பட நடிகை!.. அட இவங்களா?.. வெளியான அப்டேட்!..
நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் பிகில் திரைப்பட நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
நடிகர் ரஜினிகாந்த்:
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து இளம் நடிகர்களுக்கு இணையாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களுடன் இணைந்து படங்களில் படு பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் ரஜினிகாந்த்.
இதையும் படிங்க: ஆன்லைன் புக்கிங்கில் ரெக்கார்ட் பிரேக்கிங்!. அடிச்சி தூக்கிய புஷ்பா 2!….
வேட்டையன் திரைப்படம்:
ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் எல் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் ஒரு சுமாரான படமாகவே அமைந்திருந்தது.
ரஜினிகாந்தின் கூலி:
அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது. நடிகர் நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
மேலும் பாலிவுட் நடிகர் அமீர்கான் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இப்படி பான் இந்தியாவை சேர்ந்த அனைத்து நடிகர்களையும் ஒரே திரைப்படத்தில் இறக்கி இருக்கின்றார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . இந்த திரைப்படம் தற்போது எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் இறுதிக்குள் படத்தை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணியில் கவனம் செலுத்த இருக்கின்றார். இந்த திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பிகில் பட நடிகை:
கூலி திரைப்படத்தில் ஏற்கனவே சுருதிஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அவரை தவிர்த்து தற்போது மற்றொரு நடிகை நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அந்த நடிகை யார் என்றால் பிகில் படத்தில் நடித்திருந்தவர் தான். பிகில் படத்தில் ஆசிட் வீசப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தவர் ரெபா மோனிகா ஜான்.
இதையும் படிங்க: அட இப்படியொரு சாதனையா!.. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பட்டையை கிளப்பும் லக்கி பாஸ்கர்!..
இவர் தற்போது ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த மழையில் நனைகிறேன் என்கின்ற திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது இந்த தகவலை அவர் உறுதி செய்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் நடித்த அனுபவம் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கம் குறித்தும் அவர் பேசியிருந்தார்.