‘பிகில்’ ராயப்பன் கேரக்டருக்கு முதலில் நடிக்க இருந்தவர்?.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை!..
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலேயே விஜயின் புகழ் சமீபகாலமாக பரவி கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு நாளுக்கு நாள் விஜயின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு வசூல் சக்கரவர்த்தியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய். இந்த வளர்ச்சி ஒரு அசுர வளர்ச்சி தான் என்று மெய்சிலிர்த்து வருகின்றனர்.
இவரோடு சேர்ந்து பயணித்த நடிகர் அஜித்தும் இதே அளவு புகழைத்தான் அடைந்துள்ளார். இருவரும் ஒரே காலத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள். சரி சமமான வெற்றி தோல்விகளை பார்த்தவர்கள். இப்போதைய காலகட்டத்தில் விஜய்க்கும் அஜித்திற்கும் தான் போட்டிகள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில் விஜயின் சமீபகால படங்களில் இயக்குனர் அட்லீக்கும் மிக முக்கிய பங்கு உள்ளது. விஜய் அட்லீ காம்போவில் அமைந்த அனைத்து படங்களுமே வெற்றி படங்கள் மற்றும் மாஸான படங்களையே அட்லீ தந்துள்ளார். அந்த வகையில் வெளிவந்த படம் தான் ‘பிகில்’.
விஜய் இரட்டை வேடங்களில் நடித்து கலக்கிய படமாக பிகில் அமைந்தது. அதிலும் அவர் நடித்த ராயப்பன் கதாபாத்திரம் யாரும் எதிர்பார்க்காத அளவில் இருந்தது. வயதான தோற்றத்தில் விஜயை எப்படி பார்ப்பார்கள் என்று தயங்கி இருந்த நிலையில் ரசிகர்கள் அந்தக் கதாபாத்திரத்தை மிகவும் வரவேற்றனர்.
இந்த நிலையில் அந்த கதாபாத்திரத்தை பற்றி அட்லீ பகிர்ந்த சில விஷயம் தற்போது வைரலாகி வருகின்றது. முதலில் அந்த ராயப்பன் கதாபாத்திரத்தில் வயதான ஏதாவது ஒரு முன்னனி நடிகரை நடிக்க வைக்கலாம் என்று அட்லீ நினைத்தாராம். சரி, விஜயையே நடிக்க வைக்கலாம் என்று விஜயிடம் கூறிய போது முதலில் விஜய் யோசித்தாராம்.
அதன் பின் எதற்கு ஒரு போட்டோ டெஸ்ட் எடுத்துப் பாத்துடலாம் என்று விஜய் சொன்னாராம். அந்த போட்டோவை பார்த்து விஜய்க்கே பிடித்து போய்விட்டதாம். சரி நானே நடிக்கிறேன் என்று விஜய் கூறியதன் பேரில் ராயப்பன் கதாபாத்திரம் உருவாகியிருக்கிறது.
இதையும் படிங்க : செம காம்பினேஷன்!.. கலகலப்பாக தயாராகுகிறது கரகாட்டக்காரன் 2?.. அட ஹீரோ யாருனு தெரியுமா?..