வாய்ப்பும் இல்ல.. வேலையும் இல்ல!. எல்லாம் போச்சி!.. வறுமையில் வாடும் பிஜிலி ரமேஷ்...

Bijili ramesh: சில வருடங்களுக்கு முன்பு ஒரு பிராங்க் வீடியோ மூலம் பிரபலமானவர்தான் இந்த பிஜிலி ரமேஷ். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பலராலும் ரசிக்கப்பட்டது. இவர் ஒரு பக்கா ரஜினி ரசிகன். வெறித்தனமான ரசிகர் என்றும் சொல்லலாம். இவரின் பேசும் ஸ்டைல், உடல் மொழி, ரஜினியை போலவே செய்து காட்டும் ஸ்டைல் என பலரையும் ரசிக்க வைத்தார்.
திடீரென ஒருவர் இப்படி பிரபலமானால் அடுத்து சினிமா வாய்ப்புதான். ஜோம்பி, நெஞ்சமூண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, நட்பே துணை, ஆடை, கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஜோம்பி படத்தில் இவருக்கு அதிக காட்சிகள் இருந்தது.
இதையும் படிங்க: போதும்ட சாமி! உங்க சகவாசமே வேணாம் – திடீர் முடிவால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மக்கள் செல்வன்
லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவியை வைத்து முதலில் இயக்கிய கோமாளி படத்திலும் ஒரு சின்ன வேடத்தில் வருவார். ஆனால், இவரின் புகழை திரையுலகம் பயன்படுத்திக்கொண்டாலும் பெரிய சம்பளம் ஒன்றும் கிடைக்கவில்லையாம். ஒரு படத்தில் நடித்தால் 2 அல்லது 3 ஆயிரம் ரூபாய் கொடுப்பார்களாம். ‘இந்தா செலவுக்கு வச்சுக்கோ’ என்கிற ரீதியில்தான் இவருக்கு காசு கொடுத்துள்ளனர். அப்படி வாங்கிய காசையும் குடித்து செலவு செய்திருக்கிறார். அதன்பின் டீ கடையிலும் வேலை செய்திருக்கிறார்.

bigili
கோலமாவு கோகிலா படத்திற்கு புரமோஷன் பண்ணியதற்காக 20 ஆயிரம் கொடுத்துள்ளனர். அதுதான் இதுவரை நான் சினிமாவில் வாங்கிய அதிக சம்பளம் என்கிறார் பிஜிலி ரமேஷ். இதுவரைக்கும் சினிமாவில் பெரிதாக ஒன்றும் சம்பாதிக்கவில்லை என புலம்புகிறார் மனுஷன். சினிமாவில் பழம் தின்னு கொட்டை போட்டவர்களையே காலி செய்து விடுவார்கள். ஏமாற்றி விடுவார்கள்.
இதையும் படிங்க: எவ்வளவு கேஸ் போட்டாலும் கெட்டப் பையன் சார் இந்த அருண்! ‘கேப்டன் மில்லர்’ படத்தால் தயாரிப்பாளருக்கு வந்த சோதனை
பிஜிலி ரமேஷுக்கோ சினிமா என்றால் ஒன்றுமே தெரியாது. அதில் உள்ள நேக்கு, போக்குகள் எதுவும் தெரியாது. எத்தனை காட்சிகளில் நடித்தால் எவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும் என்றும் தெரியாது. இப்போது வாய்ப்புகள் எதுவுமில்லை. எனவே, பழைய வேலைக்கு போகலாம் என போனால் அவர்களும் வேலை கொடுக்க மறுக்கிறார்களாம். தேவையில்லாத பிரச்சனை என அவர்கள் நினைப்பதாக தெரிகிறது.
எனவே, என்ன செய்தவது என புரியாமல் மண்டை குழம்பி போய் இருக்கிறாராம் பிஜிலி ரமேஷ். அதிர்ஷ்டத்தில் கிடைக்கும் வெளிச்சம் செய்யும் வேலை இதுதான். வாழவும் விடாது சாகவும் விடாது.
இதையும் படிங்க: அத பாத்து நானே பயந்து போயிட்டேன்!.. விஜயகாந்தின் 30 வருட டிரைவர் சொன்ன பகீர் தகவல்..