More
Categories: Cinema News latest news

சூப்பர் ஸ்டார் அளவுக்கு ஸ்கெட்ச் போடும் எஸ்கே!.. அடுத்து மலையாளத்துல இருந்து ஆள் இறக்குறாராம்!..

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 23வது படத்தில் ஏற்கனவே துப்பாக்கி வில்லனை பாலிவுட்டில் இருந்து தட்டி தூக்கி வந்த நிலையில், அடுத்ததாக மலையாளத்தில் இருந்து பிரபல நடிகர் ஒருவரை தற்போது கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித்துக்கு தீனா, விஜயகாந்துக்கு ரமணா, சூர்யாவுக்கு கஜினி, விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என் அதிரடி காட்டி வந்த ஏ.ஆர். முருகதாஸ் மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் படத்தை இயக்கிய நிலையில் சரிவை சந்தித்தார்.

இதையும் படிங்க: குட்டி பாப்பா டிரெஸ் போட்டு எல்லாத்தையும் காட்டும் ரைசா வில்சன்!.. இது செம ஹாட்டு!..

ரஜினிகாந்தை வைத்து தர்பார் படத்தை இயக்கி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார். அதன் பின்னர் சில ஆண்டுகள் புதிய படங்கள் ஏதும் இயக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் 23 வது படம் மற்றும் சல்மான்கானின் சிக்கந்தர் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீப காலமாக ஜெயிலருக்கு பிறகு பான் இந்தியா நடிகர்களை தனது படங்களில் நடிக்க வைத்து வெற்றி கண்டு வருகிறார். இந்நிலையில், அதே ரூட்டை தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் பின்பற்றி வருவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சிங்கம்புலி மகாராஜா படத்துல நடிக்க அந்தப் படங்கள் தான் காரணமாம்…! அட இப்படி எல்லாமா யோசிப்பாரு?

வெறும் தமிழ் நடிகர்களை மட்டும் வைத்து படங்களை உருவாக்கினால் தமிழ்நாட்டில் மட்டும்தான் பிசினஸ் நடக்கும் என்றும் பான் இந்தியா ஹீரோவாக மாற வேண்டும் என்றால் பெரிய இயக்குனர்கள் மற்றும் மற்ற மொழி நடிகர்களை களம் இறக்கினால் தான் வெற்றிக்கான முடியும் என்பதை நன்கு புரிந்து கொண்டார்.

பாலிவுட் நடிகரான வித்யூத் ஜமாலை எஸ் கே 23 படத்தில் வில்லனாக நடிக்க வைத்துள்ள நிலையில், அடுத்ததாக மலையாள நடிகர் பிஜூ மேனனை முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடிக்க வைத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் படத்தின் நாயகியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடித்த வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கிளப்பிட்டாங்கய்யா… கிளப்பிட்டாங்கய்யா… அஜீத் அரசியலுக்கு வருகிறாரா…? வந்தா விஜய் மாதிரி இருக்காதாம்…!

Published by
Saranya M

Recent Posts