More
Categories: Cinema History Cinema News latest news

42 வருஷத்துக்கு முன்னாடியே ரஜினிக்கு ஒரு ஓப்பனிங் சாங்!.. அட அப்ப ஸ்டார்ட் ஆனதுதான் எல்லாம்..

Rajinikanth: தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் பெரிய ஸ்டார் நடிகரான பின் அவர் நடிக்கும் திரைப்படங்களில் அவர் அறிமுகமாகும்போது ஒரு பாடல் காட்சி வரும். அதில், சமூகத்திற்கு தேவையான சில நல்ல கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும். அதேபோல், சமூக அவல நிலைகள் பற்றியும் நான் அதை மாற்றுவேன் என்பது போலவும் பாடல் வரிகள் வரும். எம்.ஜி.ஆர் தன்னை இப்படித்தான் மக்களிடம் புரமோட் செய்து கொண்டார்.

அதேநேரம் சிவாஜியோ, ஜெமினி கணேசனோ, ஜெய் சங்கரோ, கமலோ கூட தாங்கள் நடிக்கும் படங்களில் ஓப்பனிங் சாங் வைத்து கொண்டதில்லை. அப்படி தன்னை புரமோட் செய்து கொள்வதில் அவர்கள் ஆர்வமில்லாதவர்களாக இருந்தார்கள். இன்னொன்று அறிமுகம் காட்சியில் பாடல் என்பது எல்லோருக்கும் செட் ஆகாது.

Advertising
Advertising

இதையும் படிங்க: டேய் ஏன் ஓடுற?.. இதலாம் என்ஜாய் பண்ணு!.. சங்கடத்தில் நெளிந்த ரஜினிக்கு சிவாஜி சொன்ன அட்வைஸ்…

எம்.ஜி.ஆருக்கு பின் அது ரஜினிக்கு மட்டுமே செட் ஆனது. எம்.ஜி.ஆராவது இரண்டு காட்சிகளில் நடித்து வசனம் பேசிவிட்டு அப்புறம் பாட்டு பாட போவார். ஆனால், ரஜினி அறிமுகமாகும்போதே பாடலுன்தான் துவங்குவார். அப்படி வெளிவந்த ஆட்டோக்காரன்.. ஆட்டோக்காரன்.. ஒருவன் ஒருவன் முதலாளி.. வந்தேன்டா பால்காரன் உள்ளிட்ட பல பாடல்கள் அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

ஒருகட்டத்தில் ரஜினி படம் என்றாலே கண்டிப்பாக ஒப்பனிங் சாங் என்பது வேண்டும் என்கிற நிலையும் உருவானது. அவரின் ரசிகர்களும் அதை எதிர்பார்க்க துவங்கிவிட்டனர். அதேநேரம், ரஜினி படத்தில் ஓப்பனிங் பாடல் வருவது என்பது எப்போது முதன் முதலில் துவங்கியது என்பதை தெரிந்து கொள்வோம்.

ரஜினி நடித்து 1980ம் வருடம் வெளியான திரைப்படம் பில்லா. இந்த படத்தில் பில்லா ரஜினி இறப்பது போல ஒரு காட்சி வரும். அது முடிந்ததும் இரண்டாவது ரஜினியை காட்டுவார்கள். அப்போது ‘நாட்டுக்குள்ள எனக்கொரு ஊர் உண்டு. ஊருக்குள்ள எனக்கொரு பேர் உண்டு’ என பாடுவார். இதுதான் ரஜினி பாடிய முதல் ஓப்பனிங் பாடலாகும்.

இதையும் படிங்க: ரஜினியிடம் மாட்டிக்கொண்டு முழித்த இயக்குனர் மகன்.. சின்ன பையன இப்படியா மிரட்டுறது!…

Published by
சிவா

Recent Posts