கையில் சிகரெட்.. ஹெல்மட் போடாம போகும் எஸ்கே பட நடிகை.. புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்!

by Saranya M |   ( Updated:2025-03-26 02:59:57  )
கையில் சிகரெட்.. ஹெல்மட் போடாம போகும் எஸ்கே பட நடிகை.. புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்!
X

#image_title

நடிகை பிந்து மாதவி ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே ஹெல்மட் கூட அணியாமல் தன் ஆண் நண்பருடன் ஸ்கூட்டி ஓட்டி செல்லும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகை பிந்து மாதவி 2008ம் ஆண்டிலிருந்து தன் திரைப்பயணத்தை தெலுங்கில் தொடங்கினார்.

பொக்கிஷம், பம்பர் ஆஃபர், ஓம் சாந்தி, ராம ராம கிருஷ்ண கிருஷ்ண உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து கௌதம் மேனன் தயாரிப்பில் உருவான வெப்பம் படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த படம் பிந்து மாதவிக்கு மேலும் பல பட வாய்ப்புகள் கிடைக்க உதவியது. அதை தொடர்ந்து கழுகு, சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் பயில்வான் ரங்கனாதன் கடந்த ஆண்டு அளித்திருந்த பேட்டியில் திரிஷா முதலில் காதலித்து வந்த வருணுடன் நிச்சயம் நடந்தது பிறகு அவர்களின் திருமணம் நின்றதற்கு காரணம் பிந்து மாதவியுடன் இருந்த பழக்கம் தான் எனக் கூறியிருந்தார். அதை பிந்து மாதவியும் திருமணம் நின்ற பிறகு தான் வருணுடன் பழகியதாக தெரிவித்திருநதார். ஆனால் இன்று வரை அவரும் யாரையும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

தற்போது பிந்து மாதவி ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே தலையில் ஹெல்மெட் கூட அணியாமல் தனது ஆண் நண்பருடன் ஸ்கூட்டி ஓட்டி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் அவரது ஆண் நண்பர் கையில் சிகரெட் வைத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் ஸ்கூட்டரில் செல்லும் போது சிகரெட் பிடிக்கலாமா? ஹைதராபாத் போலீஸ் உடனடியாக பிந்து மாதவிக்கு அபராதம் விதிக்க வேண்டும் என தாளித்துக் கொட்டி வருகின்றனர்.

Next Story