தனுஷின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய சிவகார்த்திகேயன்… ஓஹோ இதுதான் விஷயமா??

by Arun Prasad |   ( Updated:2022-10-09 12:39:03  )
தனுஷின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய சிவகார்த்திகேயன்… ஓஹோ இதுதான் விஷயமா??
X

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக திகழ்ந்த சிவகார்த்திகேயன் “மெரினா” என்ற திரைப்படம் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் “3” திரைப்படத்தில் தனுஷுக்கு நண்பராக நடித்தார். இந்த காலக்கட்டத்தில் தனுஷுடன் மிகவும் நெருங்கி பழகி வந்தார் சிவகார்த்திகேயன்.

“3” திரைப்படத்திற்கு பிறகுதான் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கத்தொடங்கினார். “மனம் கொத்தி பறவை”, “கேடி பில்லா கில்லாடி ரங்கா” ஆகிய திரைப்படங்களில் நடித்த பிறகு சிவகார்த்திகேயன் நடித்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படம் அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

அதன் பின் ஒரு சிறந்த என்டெர்டெயினராக இன்றுவரை ஜொலித்துக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அஜித், விஜய் திரைப்படங்களுக்கு பிறகு திரையரங்குகள் திருவிழா போல் காணப்படுவது சிவகார்த்திகேயனின் திரைப்படங்களுக்குத்தான். குறிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸை தனது கைக்குள் வைத்திருப்பவர். மேலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகராகவும் திகழ்கிறார்.

இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பல மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாக பல செய்திகள் பரவியது. அதே போல் தனுஷின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்த அனிருத், ஒரு கட்டத்தில் தனுஷின் எந்த திரைப்படத்திற்கும் இசையமைக்கவில்லை. வெகு காலம் கழித்து சமீபத்தில்தான் “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோரை குறித்து ஒரு அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் “தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோர் முன்பு ஒன்றாக இருந்தார்கள். சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியது தனுஷ்தான். எப்போது அழைத்தாலும் சிவகார்த்திகேயன் தனது திரைப்படத்தில் நடிப்பார் எனவும் தனது கட்டுப்பாட்டில் இருப்பார் எனவும் தனுஷ் நினைத்தார்.

ஆனால் சிவகார்த்திகேயன் வேறு ஒரு பாதையில் செல்லத்தொடங்கினார். இது தனுஷிற்கு பிடிக்கவில்லை. மேலும் அனிருத் தனுஷ் படங்களை விட சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க தொடங்கினார். ஆதலால் தனுஷிற்கும் அனிருத்திற்கும் இடையே சில பிரச்சனைகள் வந்தது” என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் “இந்த சம்பவத்தால் தனுஷிற்கு அனிருத், சிவகார்த்திகேயன் ஆகியோர் விரோதிகள் என்பது போன்ற செய்திகள் பரவின” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story