நேற்று துபாய் விமான நிலையத்தில் நயன்தாராவுடன் வலைப்பேச்சு டீம் பிஸ்மி, அந்தணன், சக்திவேல் ஆகியோர் மூவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. இது ஒரு சாதாரண புகைப்படம் தானே? ஏன் இந்த அளவு இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றது என நினைக்கலாம். ஆனால் இதற்குப் பின்னணியில் நடந்த ஒரு கதை தான் அதற்கு காரணம்.
ஏனெனில் பிஸ்மி அந்தணன் சக்திவேல் ஆகிய மூவரையும் மறைமுகமாக நயன்தாரா 3 குரங்குகள் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அவர் பேசிய அந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது பிஸ்மி அந்தணன் சக்திவேல் ஆகியோரை வருத்தத்தில் ஆழ்த்தியது. பாடி ஷேமிங் பண்ணுவது நயன்தாரா பொறுத்த வரைக்கும் சரியா என தன்னுடைய கருத்துக்களையும் வலைப்பேச்சு டீமிலிருந்து முன் வைத்தனர்.
இந்த நிலையில் தான் நயன்தாராவுடன் இவர்கள் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் பெரிய பேசு பொருளாக நேற்று மாறி இருக்கிறது. இதைப் பற்றி வலைப்பேச்சு பிஸ்மி கூறும் பொழுது ஒரு நிகழ்ச்சிக்காக இவர்கள் மூன்று பேரும் துபாய் சென்றார்களாம். அதே சமயம் நயன்தாராவும் துபாயில் தான் இருந்தார். இருவரும் ஒரே விமானத்தில் தான் வருவதாக இருந்தது.
அப்போதுதான் விமான நிலையத்தில் நயன்தாராவும் வலைப்பேச்சு டீமும் சந்தித்திருக்கின்றனர். இது ஒரு எதேச்சையாக நடந்த சந்திப்பு தான் என்று பிஸ்மி கூறியுள்ளார். சரி ரெண்டு தரப்பும் பேசும்பொழுது எந்த மாதிரியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டீர்கள்? உங்களுக்கு எதுவும் கோபம் இருந்ததா அல்லது உங்களால் நயன்தாராவுக்கு ஏதாவது கோபம் இருந்ததா என்ற ஒரு கேள்வி முன் வைக்கப்படும் பொழுது இதற்கு பதில் கூறிய பிஸ்மி அப்படி எதுவும் இல்லை .
சொல்லப்போனால் எங்களை விட நயன்தாரா தான் கோபமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் ஒரே ஒரு பேட்டியில் தான் எங்களைப் பற்றி அவ்வாறு கூறியிருந்தார். நாங்கள் தான் நயன்தாராவை பற்றி ஆயிரம் முறை எங்களுடைய சேனலில் பேசி இருக்கிறோம் .அவர்தான் எங்களை பார்த்ததும் முகத்தை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு கோபமும் இல்லாமல் எங்களை பார்த்து புன்னகைத்து நன்றாக வரவேற்றார். நயன்தாரா இடத்தில் நான் இருந்திருந்தால் கண்டிப்பாக எனக்கு கோபம் இருந்திருக்கும் .நான் பேசியிருக்க மாட்டேன் என பிஸ்மி இவ்வாறு கூறியுள்ளார்.




