Connect with us

Cinema History

23 ஆண்டுகளைக் கடந்தும் ரசிகர்களின் நெஞ்சில் இந்தப் படம் நிக்குதுன்னா அதுக்கு இதுதான் காரணம்..!

1999ல் இயக்குனர் பாலா தமிழ்த்திரை உலகுக்கு அழகான காதலையும் வலியையும் உருக உருக எடுத்து கொடுத்த படம் தான் சேது.

23 ஆண்டுகளைக் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் இது. அதற்குக் காரணம் படத்தில் பல சுவாரசியங்கள் நிறைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. அவரது படங்கள் தான் இதற்குக் காரணம். பயங்கரமான யதார்த்தம், உச்சக்கட்ட வலியையும் கொடுத்துள்ளார்.

பாலா தமிழ்சினிமாவில் காலடி எடுத்து வைக்க முதல் படியாக அமைந்தது சேது. பாலுமகேந்திராவிற்கு அசிஸ்டண்ட் டைரக்டராக இருந்தார் பாலா. இவர் சேது படத்தின் கதையை 1990களிலேயே எழுதிவிட்டார்.

இந்தப்படத்திற்கு இவர் முதலில் வைத்த பெயர் அகிலன். ஏன் இந்தப் பெயரை வைத்தார் என்றால் பாலுமகேந்திராவின் மனைவி பெயர் அகிலா. அவரது நினைப்பாகவே இருக்க வேண்டும் என்று தான் இந்தப் பெயர் வைத்தார்.

முதலில் தனது நண்பரான நடிகர் விக்னேஷை வைத்துத் தான் இந்தப் படத்தை எடுக்க நினைத்தார் பாலா. நாளைக்கு பூஜை. ஆனா இன்னிக்கு இரவே படம் டிராப் என தகவல் பாலாவுக்கு வந்தது.

sethu

என்ன பண்றதுன்னே தெரியாம எடுக்காத படத்துக்கு பூஜையும் போட்டார் பாலா. அப்புறம் நடிகர் சக்கரவர்த்திக்கிட்ட இந்தப் படத்தோட கதையைச் சொன்னார். கதை அவருக்குப் பிடித்திருந்தது. ஆனால் அவரு ரொம்ப பிசியாக இருந்ததால கால்ஷீட் கொடுக்க முடியல.

அடுத்ததா நடிகர் முரளிக்கு இந்தக் கதை சொல்ல அவருக்கும் கதை பிடித்தது. ஆனால் பண்ண முடியாத சூழல். ஆனால் வேற வேற நடிகர்கள்கிட்ட இந்தக் கதையை சொன்னார். ஆனால் பாலா போட்ட கண்டிஷன்ல இந்தப் படத்துல அவங்க நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

Sethu3

அந்த நேரத்துல தான் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காதா என போராடிக்கிட்டு இருந்த நடிகர் விக்ரம் கிட்ட இந்தக் கதையை சொன்னாரு. அவரும் நான் பண்றேன்னு சொன்னாரு. அடுத்ததா அகிலன் என்ற தலைப்பை சேதுவாக மாற்றினாங்க. படப்பிடிப்பும் தொடங்கியது.

இளையராஜாவின் ரம்மியமான இசையில் 1997ல் சேது படத்தின் வேலைகள் தொடங்கின. கதாநாயகிக்கு முதலில் கீர்த்தி ரெட்டி, அடுத்ததா ராஜஸ்ரீன்னு எல்லாரையும் செலக்ட் பண்ணி வச்சி கடைசியில தான் அபிதாவைத் தேர்வு செய்தாங்க.

அந்த நேரத்துல அதாவது 1997ல் பெப்சி தொழிலாளர்கள் ஸ்டிரைக் பண்ணாங்க. இதனால எந்தப் படத்துக்கும் சூட்டிங் நடக்காமல் போனது. சேது படமும் அப்படியே நின்று போனது.

ஸஜூன் மாதம் ஆரம்பிச்ச ஸ்டிரைக் டிசம்பர் வரை தொடர்ந்தது. அப்போ விக்ரமுக்கு ரொம்ப பொருளாதார சிக்கல். அதனால இந்தக் கேப்புல விக்ரம் ராதிகா எடுத்து வந்த டிவி தொடரான சித்தியில் ஒரு வேடம் கேட்டார். இந்த நேரத்துல ஒரு மோசமான சம்பவம் நடந்தது.

Sethu2

தயாரிப்பாளர் படத்தைப் பாதியிலேயே விட்டுட்டுப் போயிட்டாரு. விக்ரம் தான் டிவி சீரியல்ல சம்பாதிச்ச 60 ஆயிரம் ரூபாயிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொண்டு மீதி பணத்தை பாலாக்கிட்ட கொடுத்து எப்படியாவது இந்தப்படத்தை எடுங்கன்னு சொன்னாரு. இவ்வளவு ரிஸ்க் எடுத்த விக்ரமுக்கும், பாலாவுக்கும் இந்தக் கதையின் மேல ரொம்ப நம்பிக்கை இருந்தது.

அதுக்குக் காரணம் யாரும் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்காத ஒரு கதையா சேது இருந்தது. இந்தக்கதையை எடுக்கறதுக்கு பாலாவுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தது அவரோட நண்பர் வாழ்க்கையில நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.

ஒரு பொண்ணக் காதலிச்சு தன்னோட மனநிலை சரியில்லாமப் போயி கடைசியில மென்டல் ஆஸ்பத்திரில சேர்க்குற அளவுக்கு பாதிக்கப்பட்டாரு. அது மட்டுமல்லாம மனநலக் காப்பகத்துக்கும் போனாரு. அங்க அவருக்கு ஏற்பட்ட ஒரு தாக்கத்தைப் படத்துலக் கொண்டு வரணும்னு நினைச்சாரு.

அதனால இந்தப் படத்தோட ஹீரோவுக்கு முதல்லயே நிறைய கண்டிஷன்களைப் போட்டாரு. அதுக்கு ஒத்துக்கிட்டா தான் படத்துல நடிக்க வைக்கணும்னு முடிவு பண்ணாரு. விக்ரம் அதுக்கு எல்லாம் ஒத்துக்கிட்டாரு. மனநோயாளி கேரக்டருக்காக விக்ரம் மொட்டை அடிச்சாரு.

தன் உடலின் எடையை 21 கிலோவை இந்தக் கதாபாத்திரத்திற்காகக் குறைத்துக் கொண்டார். விக்ரமோட அர்ப்பணிப்பு பாலாவை ரொம்பவே ஈர்க்க ஆரம்பிச்சது. உடல் எடையைக் குறைப்பதற்காக தினமும் ஒரு முட்டை, ஒரு சப்பாத்தி, ஒரு இட்லி இவை தான் விக்ரமுக்கு சாப்பாடு.

தனது அன்றாட பழக்கவழக்கங்களையே மாற்றிக் கொண்டார் விக்ரம். இந்தக் கேரக்டருக்காக படத்துல ஒரு இரும்பு வளையத்துடன் கூடிய சங்கிலியைக் கழுத்தில் அணிந்து இருந்தார் விக்ரம்.

அப்போது பாலா ஷாட் ரெடியாகும் போது மட்டும் இதைப் போடுங்க. மற்ற நேரம் கழற்றி வைச்சிருங்க என்றார். அதற்கு விக்ரம் இல்ல சார்…இதைப் போட்டு இருந்தால் தான் ஒரு கன்டினியுட்டி வரும்னு அதைக் கழற்றாமலே இருந்தார்.

இந்தப் படத்துல வர்ற முக்கியமான சீன். விக்ரம் மனநோயாளியாக வருவது தான். இந்தக் காட்சி பார்வையாளர்களுக்குள் ஒரு தாக்கத்தை உண்டு பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் க்ரீன் கலர் லைட் கொடுக்கப்பட்டு இருக்கும்.

Director Bala

எங்கே செல்லும் இந்தப் பாதை என்ற பாடல் காட்சியைப் பார்க்கும் போது நம்மை ஆச்சரியப்படுத்தும். அதோடு அந்தப் பாடலில் விக்ரமின் நிலையைக் காட்டும்போது நம் நெஞ்சம் பதறிவிடும். இந்தப் படத்துல ஒரு வேடிக்கையான சம்பவமும் நடந்தது.

படத்தோட கிளைமாக்ஸ்ல ஹீரோயின் இறந்துடுவாங்க. இந்த சீனை நைட் 10 மணில இருந்து அதிகாலை 4 மணி வரை சூட் பண்ணினாங்க. ஆரம்பத்துல முழிச்சி இருந்ததாலும் கண்ணை மூடியே வச்சிருந்ததால நல்லா ஒரு தூக்கத்தைப் போட்டுட்டாங்க அபிதா.

சூட் முடிஞ்சதும் அபிதாவை அங்க யூனிட்ல இருந்த ஒருத்தர் எழுப்பியுள்ளார். படம் எடுத்து முடிச்சு அந்த கிளைமாக்ஸ் சீனைப் பார்க்கும் போது விக்ரம் அவ்வளவு உருக்கமா நடிச்சிருந்தாரு.

ஆகா இப்படிப்பட்ட சீன்லயா நாம தூங்கிட்டோம்னு அபிதா நினைச்சாங்களாம். இந்தப் படத்தோட ரன்னிங் டைம் 2 மணி நேரம் 10 நிமிஷம். அதுல ஒன்றரை மணி நேரத்துக்கு அப்புறம் தான் இன்டர்வெல்லே விடுவாங்க. இடைவேளைக்குப் பின் வசனம் ரொம்ப கம்மியாகத் தான் போகும். அதுக்குப் பதிலாக படம் இசையிலேயே போகும்.

இதுல யாருக்கும் தெரியாத விஷயம் என்னன்னா ஹீரோயினோட அப்பா கேரக்டர்ல வர்றவருக்கு எம்.எஸ்.பாஸ்கர் தான் டப்பிங் கொடுத்தார். முதல்ல இந்தப் படத்தை ஒவ்வொரு விநியோகஸ்தருக்கும் போட்டுக் காட்டி வாங்க சொல்லும்போது வாங்க மாட்டோம்னுட்டாங்க. அதுக்கு அப்புறம் தான் ஆச்சரியமே நடந்தது.

இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து

இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம்னு 4 மொழிகளில் ரீமேக் பண்ணாங்க. இதுல வங்காளத்துல மட்டும் படத்தோட கதையையே மாற்றி எடுத்துருப்பாங்க. அதனால தான் இந்தப் படம் வங்காளத்துல ரொம்பவே மோசமா இருந்தது.

இப்படி ரிலீஸாகும்போது ஆள் அட்ரஸே இல்லாம இருக்கும்போது அந்த வருஷத்தின் சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. வெறும் விக்ரமாக இருந்தவருக்கு ச்சீயான் என்ற அந்தஸ்தையும் கொடுத்தது.

சினிமாவுல தனக்கென தவிர்க்க முடியாத பேரையும் பாலா ஏற்படுத்திக் கொண்டார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top