இப்படி பண்ணலாமா சிவகார்த்திகேயன்!...புலம்பி தவிக்கும் பிளாக் பாண்டி...
பொதுவாக சில நடிகர்கள் கீழ் மட்டத்திலிருந்து கஷ்டப்பட்டு மேலே வந்திருப்பார்கள். அவர்கள் வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருந்த போது அவருக்கு சில நண்பர்கள் இருந்திருப்பார்கள்.
அவர்கள் எல்லோருடனும் வளர்ந்த பின்பும் சில நடிகர்கள் மட்டுமே பழகுவார்கள்.. பலரும் பழசை மறந்துவிடுவார்கள். ஆனால், சிவகார்த்திகேயன் அப்படி அல்ல. அவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றியபோது பழகிய எல்லோருடனும் தற்போதும் நட்பில் இருக்கிறார். அவரின் நண்பர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பும் வாங்கி தருகிறார்.
ஆனால், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்து சினிமவில் நுழைந்த நடிகர் பிளாக் பாண்டி சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ‘நானும் சிவகார்த்திகேயனும் நண்பர்களாகத்தான் இருந்தோம். அவர் வளர்ந்த பின் நான் கஷ்டப்படுவதை கேள்விப்பட்டு அவரது மேனேஜர் மூலம் எனக்கு பணம் கொடுத்து அனுப்பினார்.
அதற்கு ‘எனக்கு பணம் வேண்டாம். வாய்ப்பு கொடுக்க சொல்லுங்கள்’ எனக்கூறி அவரை அனுப்பி விட்டேன். அவர் சிவகார்த்திகேயனிடம் என்ன கூறினாரோ தெரியவில்லை. அதன்பின் என்னால் சிவகார்த்திகேயனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை எனக் கூறியிருந்தார்.
அதேபேட்டியில் ‘நானும் அஞ்சலியும் நண்பர்கள். அங்காடி தெரு படத்தில் கூட இருவரும் இணைந்து நடித்தோம். ஆனால், அவர் வளர்ந்த பின் என் செல்போன் அழைப்பையே அவர் எடுப்பதில்லை. வளர்ந்து ஒரு இடத்தை பிடித்துவிட்டால் இப்படி மாறிவிடுவார்கள் போலிருக்கிறது’ என அவர் புலம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.