இதுவரை பிக்பாஸ் தமிழ் 9 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 10வது சீசன் தொடங்கியது. அதில் 19 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள்ளே அனுப்பப்பட்டனர்.
கடந்த சில சீஷன்கள் போலவே இந்த முறையும் விஜய் சேதுபதியே தொகுப்பாளராக இருக்கிறார். எந்த சீசன்னும் இல்லாத அளவுக்கு போட்டியாளர்கள் சிலர் இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பே அறிமுக மேடையிலிருந்தே வெளியேறினார்கள்.
அதில் ஒருவர்தான் சினிமா விமர்சகர் மற்றும் யூடியூப் அவர் பிரசாந்த். அதேபோல் சீரியல் நடிகை ஷப்ணம் வெளியேறினார். இந்நிலையில்தான் நேற்று இரவு மற்றொரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார்..
பிக்பாஸ் போட்டியாளர்களில் பிளாக் பாண்டியும் ஒருவர். தமிழில் பல திரைப்படங்களில் இவர் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார். உடல் நலக்குறைவு மற்றும் மருத்துவ பிரச்சனை காரணமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து அவர் நேற்று இரவு தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.. அதேநேரம் வொய்ல்ட் கார்ட் மூலம் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவதற்கும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.







