எஸ்.கே.வுக்கு போட்டியா வரும் கவின்!.. பிளடி பெக்கர் ரிலீஸ் தேதிய சொல்லிட்டாங்களே!...

by சிவா |   ( Updated:2024-09-02 14:23:09  )
bloody
X

#image_title

Kavin: விஜய் டிவி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் கவின். சில சீரியல்களில் நடித்தார். அதன்பின் சினிமாவில் சில படங்களில் ஹீரோக்களின் நண்பர்களில் ஒருவராக நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகம் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் கவினும், நடன இயக்குனர் சாண்டியும் அடித்த லூட்டி ரசிகர்களை ரசிக்க வைத்தது.

அந்த நிகழ்ச்சிக்கு பின் கவினின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் லிஃப்ட். சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிபவர்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பது ஹாரரையும் சேர்த்து ஒரு திரில்லர் படமாக வெளிவந்த லிஃப்ட் படம் ரசிகர்கள் கவர்ந்து ஹிட் அடித்தது.

அதன்பின் டாடா என்கிற படத்தில் நடித்தார். மனைவி விட்டு விட்டு சென்றுவிட குழந்தையை தானே வளர்க்கும் வேடத்தில் அசத்தியிருந்தார் கவின். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்திருந்தார். செண்டிமெண்ட் காட்சிகள் கொண்ட இப்படம் நல்ல வசூலை பெற்றது.

அடுத்து வெளிவந்த படம்தான் ஸ்டார். இந்த படத்திற்கு சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் புரமோஷன் செய்யப்பட்டது. எனவே, இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எகிறியது. இப்படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய எலன் இயக்கியிருந்தார். ஆனால், இந்த படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.

கவின் நன்றாக நடித்திருந்தும் படத்தின் கதை மற்றும் திரைக்கதை ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது. எனவே, பி மற்றும் சி செண்டர்களில் இப்படம் ஓடவில்லை. சென்னை போன்ற பெரிய நகரங்களிலும் 3 நாட்கள் மட்டுமே இப்படம் வசூலை பெற்றது. ஒருபக்கம், இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் பிளடி பெக்கர் என்கிற படத்திலும் நடித்துவிட்டார் கவின்.

இந்த படத்தை நெல்சனின் உதவியாளர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியிருக்கிறார். இந்நிலையில், இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் அமரன் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. எனவே, அவருக்கு போட்டியாக கவினின் பிளடி பெக்கர் படமும் வெளியாகிறது.

bloody

#image_title

Next Story