Connect with us
brother movie

Cinema News

என்னது கொரியன் படத்துல இருந்து சுட்டதுதான் ஜெயம்ரவி படமா!… புளூ சட்டை மாறனோட மரணகலாய்…

தமிழில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் ஜெயம் ரவி. இவர் தமிழ் தெலுங்கு என பல மொழிகளி, நடித்துள்ளார். இவரின் ஜெயம் படத்தின் இவருடன் சதா நடித்திருந்தார். மேலும் இப்படம் இவருக்கு மிகபெரிய வெற்றியையும் தேடித்தந்தது.

இவர் பின் பல வெற்றி படங்களில் நடித்தார். இவரின் சொந்த அண்ணனான மோகன் ராஜா இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ளார். எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி,உனக்கும் எனக்கும் போன்ற திரைப்படங்களின் மூலம் வயது பெண்களை கட்டி போட்டார். மேலும் அக்கால இளைஞர்கள் ரசிக்கும்படி இப்படங்கள் இருந்தன.

பின் தனி ஒருவர், மிருதன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இப்படங்களும் இவருக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தன. இவர் நடித்த தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதன் இரண்டாம் பாகத்தின் படபிடிப்புகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான படம்தான் அகிலன். இப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இப்படத்திற்கு பின் இந்த மாதம் ஜெயம் ரவி மற்றும் நயன் இணைந்து நடிக்கும் இறைவன் படம் வெளியாகவுள்ளது. இப்படத்தினை இயக்குனர் ஐ.அஹ்மத் இயக்கியுள்ளார் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அதனை தொடர்ந்து சிவா மனசுல சக்தி, மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் பிரபல திரைப்பட விமர்சகர் மற்றும் யூடியூபருமான புளூ சட்டை மாறன் இப்படத்தை கலாய்த்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படம் பிரபல கொரியன் டிராமாவின் காப்பி என கிண்டலாக பேசியுள்ளார். Breadth Of Destiny  என்றா கொரியன் திரைப்படத்தின் தழுவலா என்ற கேள்வியுடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

review of poster brother

review of poster brother

google news
Continue Reading

More in Cinema News

To Top