நல்லா திட்டுங்கடா!.. அதான் என் படத்துக்கு புரமோஷன்.. இறங்கி அடிக்கும் புளூசட்ட மாறன்…

Published on: December 6, 2021
blue
---Advertisement---

விமர்சனம் என்கிற பெயரில் புதிய திரைப்படங்களை தாறுமாறாக கிழித்து தொங்க போடுபவர் மாறன். தமிழ் டாக்கிஸ் என்கிற யுடியூப் சேனலில் இவர் திரைப்படங்களை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார். வழக்கமாக தமிழ் சினிமாவில் இடம் பெறும் மசாலாக்கள், அபத்தங்கள், ஒரே மாதிரியான காட்சிகள், வலுவில்லாத திரைக்கதைகள் ஆகியவற்றை செமயாக நக்கலடிப்பார்.

சில இயக்குனர்கள் இவர் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர். மேலும், எங்கள் படங்களை இப்படி கிண்டலடிக்கிறாயே உன்னால் முடிந்தால் ஒரு படத்தை எடுத்துக்காட்டு என பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மாறனிடம் சவால் விட்டனர்.

anti indian

அந்த சவாலை ஏற்ற மாறன் ‘ஆண்டி இண்டியன்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். மதம் எந்த அளவுக்கு மனிதர்களை அழிக்கிறது என்பதை தனது படைப்பில் காட்சிகளாகவும் உரையாடல்கள் மூலமாகவும் இப்படத்தில் உணர்த்தியுள்ளார் மாறன். இப்படம் சிறப்பாக இருப்பதாக பாரதிராஜா உள்ளிட்ட பல இயக்குனர்களும் பாராட்டியுள்ளனர்.

meem

ஆனால், இவர் மீது கோபத்தில் இருக்கும் விஜய், அஜித், ரஜினி ரசிகர்கள் இவரை டிவிட்டரில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆண்டி படம் பற்றி எந்த செய்தி அவர் வெளியிட்டாலும் ‘இந்த படம் ஓடாது. நாங்க பாக்க மாட்டோம்..’ என்கிற ரீதியில் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

meem

ஆனால், அதில் பலருக்கும் அவர் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறார். மேலும், நீங்க திட்டுவதுதான் என் படத்திற்கு புரமோஷன். நல்ல திட்டுங்கடா’ எனக்கூறி அவர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார் புளூசட்ட மாறன்.

எனவே, இவரை எப்படி சமாளிப்பது என தெரியாமல் முழித்து வருகிறார்கள் அந்த ரசிகர்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment