கள்ளக்குறிச்சி விவகாரம்!.. சூர்யாவை பங்கம் செய்த புளூசட்டை மாறன்!.. அதுக்குன்னு இப்படியா!..
தமிழ் சினிமா பிரபலங்களை விமர்சனம் என்கிற பெயரில் வெளுத்து வாங்கி வருபவர்தான் யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன். இவருக்கு மசாலா படங்கள் என்றாலே பிடிக்காது. சினிமாவில் நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர் இவர். எனவே, வியாபார நோக்கத்தோடு எடுக்கப்படும் படங்களை விமர்சனம் என்கிற பெயரில் தாறுமாறாக கிழித்து தொங்கவிடுவார்.
இவரின் விமர்சனங்களை ரசிக்கவே தனி ரசிகர் கூட்டமும் உண்டு. பல லட்சம் பேர் இவரின் தமிழ் டாக்கிஸ் யுடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள். ஒருபக்கம், மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காத நடிகர்களையும் புளூசட்ட மாறன் கடுமையாக கிண்டலடித்து நக்கலடிப்பார்.
இதையும் படிங்க: இந்த பாட்டாவது தேறுமா?!.. வெளியானது கோட் பட செகண்ட் சிங்கிள் அப்டேட்!..
இதனால், அந்த ரசிகர்களின் கோபத்திற்கும் அவர் ஆளாவார். ரசிகர்கள் எவ்வளவு திட்டினாலும் சரி. புளூசட்ட மாறன் பின் வாங்குவதே இல்லை. ஏற்கனவே, ரஜினி, விஜய், அஜித் என பலரையும் வம்பிக்கிழுத்து அவர்களின் ரசிகர்களிடம் சண்டை போட்டிருக்கிறார். இமான் விஷயத்தில் சிக்கிய சிவகார்த்திகேயனையும் வச்சு செய்தார்.
இப்போது நடிகர் சூர்யாவை வம்பிழுத்திருக்கிறார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதையடுத்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னார். திரையுலகை பொறுத்தவரை விஷால், ஜிவி பிரகாஷ் ஆகியோர் தமிழக அரசை விமர்சித்து டிவிட் செய்திருந்தனர். ஆனால், மற்ற எந்த நடிகர்களும் இதுபற்றி வாய் திறக்கவில்லை.
நடிகர் சூர்யா கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது பல விஷயங்களுக்கும் குரல் கொடுத்தார். மத்திய அரசை எதிர்த்து கூட தனது கருத்தை தொடர்ந்து பதிவு செய்து வந்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தபின் அவர் எந்த சமூக பிரச்சனை பற்றியும் பேசுவதில்லை.
இந்நிலையில், ‘2021க்கு முன்.. இப்போது..’ என பதிவிட்டு புளூசட்ட மாறன் டிவிட்டரில் சூர்யாவை கலாய்த்து மீம்ஸ்களை பகிர்ந்திருக்கிறார்கள். இதனால், கோபமடைந்த சில சூர்யா ரசிகர்கள் அவரை அசிங்கமாக திட்டி வருகிறார்கள். ஆனால், ‘அஞ்சான் பாய்ஸ் கதறல்’ என ரிப்ளை கொடுத்து அதற்கும் டஃப் கொடுத்து வருகிறார் அவர்.