தல.. விஜய் ஸ்கோர் பண்றார்!. போட்டோவ இறக்கி விடுங்க!.. அஜித்தை பங்கம் பண்ணும் பிரபலம்…

Published on: June 28, 2024
ajith vijay
---Advertisement---

நடிகர் விஜயும் அஜித்தும் பல வருடங்களாகவே போட்டி நடிகர்களாகவே வலம் வருகிறார்கள். இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் நடிக்க துவங்கியவர்கள். அஜித் சாக்லேட் பாயாக நடித்தவர் எனில், விஜயின் அப்பா எஸ்.ஏ.சி இயக்கத்தில் கிளுகிளுப்பு காட்சிகள் கொண்ட காதல் படங்களில் நடித்தவர்.

அஜித் தனது அழகையும், வசீகரத்தையும் காட்டி வளர்ந்தால் விஜய் தனது நடன திறமையை காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர். ஒருகட்டத்தில் இருவருமே ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறி மாஸ் ஹீரோவாக மாறினார்கள். ரஜினியும், கமலும் சீனியர் நடிகர்கள் ஆகிவிட்ட நிலையில் விஜய் – அஜித் இருவருக்கும்தான் கடும் போட்டி நிலவுகிறது.

அதேநேரம், பொறுப்புடன் ஒரு படத்தை முடித்தவுடன் அடுத்த படம் என நடிக்க போய் விடுகிறார். ஆனால், அஜித் பைக்கை எடுத்துகொண்டு எங்கேயாவாது போய்விடுவார். வாரிசு படம் முடிந்தபின் லியோ படத்தில் நடித்துவிட்டு அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்துமுடித்துவிட்டார் விஜய்.

ஆனால், துணிவு படம் வெளியாகி ஒன்றரை வருடங்கள் ஆகியும் அஜித்தின் அடுத்த படம் இன்னமும் வெளியாகவில்லை. அதேநேரம், விஜய் படத்தின் அப்டேட் எதாவது வெளியாகும் நாளில் அஜித் படம் தொடர்பான அப்டேட் அல்லது அவரின் புகைப்படம் என எதாவது வெளியாகும். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோட் படத்தின் 2வது சிங்கிள் வெளியானபோது அஜித்தின் புதிய புகைப்படங்கள் வெளியானது. இதை கடந்த சில வருடங்களாகவே அஜித் தரப்பு செய்து வருகிறது. இன்று அதிகம் மதிப்பெண் எடுத்த பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளை நேரில் வரவழைத்து பரிசு கொடுத்தார் விஜய். அதோடு, அவர்கள் முன் பேசிய விஜய் அவர்களுக்கு பல அறிவுரைகளையும் சொன்னார்.

இந்நிலையில் பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘தல.. விஜய் இன்னைக்கு ஸ்டூடண்ட்ஸ் மத்தியில் பயங்கரமா ஸ்கோர் பண்ணிக்கிட்டு இருக்கார். எதாவது போட்டோ இருந்தா உடனே இறக்கி விடுங்க.. அது பழசா இருந்தாலும் பரவால்ல’ என நக்கலடித்திருக்கிறார். இதையடுத்து அஜித் ரசிகர்கள் அவரை திட்டி வருகிறார்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.