உருட்டு உருட்டு!.. கேப்டன் மில்லர் வசூலை பங்கம் செய்த புளூசட்ட மாறன்..

captain miller: ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா, சிம்பு போன்ற நடிகர்களின் படங்கள் வெளியானாலே ஒரு நாளில் படம் இத்தனை கோடி வசூல் என அடித்து விடுவார்கள். உண்மையான வசூல் என்பது தயாரிப்பாளருக்கு சரியாக தெரியாத நிலையில் ரசிகர்கள், டிராக்கர்ஸ் என எல்லோரும் சேர்ந்து அவர்களே ஒரு தொகையை சொல்லி இதுதான் வசூல் என அடித்துவிடுவது சமீபகாலமாக அதிகரித்துவிட்டது.
எப்போது திரைப்படங்களை சமூகவலைத்தளங்களில் புரமோட் செய்ய துவங்கினார்களோ அப்போதே இது துவங்கிவிட்டது. பணம் வாங்கிக்கொண்டு படத்தை பற்றி ஆஹோ ஓஹோ என ரைட்டப் எழுதுவது, டிவிட்டரில் போடுவது என பலரும் இதையே ஒரு தொழிலாக செய்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: என்னையே வாடா கலாய்க்கிறீங்க? அந்த விஷயமே வேண்டாம்!… தலைவர்171 படத்தில் யூடர்ன் போட்ட ரஜினிகாந்த்!…
குறிப்பாக ஒரு படத்தின் வசூல் இத்தனை கோடி என பொய்யாக பதிவிடுவதையே படத்தின் புரமோஷனாக நினைக்கிறார்கள். படம் ரிலீசானது முதல் ஒவ்வொரு நாளும் இவ்வளவு கோடி வசூல், அவ்வளவு கோடி வசூல் என உண்மைக்கு புரம்பான தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதை உண்மை என நம்பி சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களும் அதையே தூக்கி கொண்டு அலைகிறார்கள்.
சமூகவலைத்தளங்கள் பெரிய சக்தியாக மாறிவிட்ட நிலையில் இதை தடுக்க முடியாத நிலையும் உருவாகிவிட்டது. தனுஷுன் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம்தான் கேப்டன் மில்லர். சாணி காயிதம், ராக்கி ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள திரைப்படம் இது.
இதையும் படிங்க: மிகப்பெரிய தோல்விக்கு பின் 2023ல் கம்பேக் கொடுத்த 4 இயக்குனர்கள்!. கலங்க வைத்த ‘சித்தா’..
12ம் தேதி இப்படம் வெளியானது. வழக்கம்போல் இப்படம் இத்தனை கோடி வசூல் செய்தது என பலரும் பரப்ப துவங்கிவிட்டனர். படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் உலகம் முழுவதும் 71 கோடியை வசூல் செய்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இதுவும் உண்மையான தகவலா என்பது தெரியவில்லை.
இந்நிலையில், இந்த தகவலை பிரபல சினிமா விமர்சகர் மற்றும் தமிழ் டாக்கிஸ் யுடியூப் சேனல் புளூசட்ட மாறன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘உருட்டு உருட்டு’ என பதிவிட்டுள்ளார். ஜெயிலர், லியோ ஆகிய படங்களின் வசூல் நிலவரம் வெளியானபோதும் புளூசட்ட மாறன் அதை மறுத்து கிண்டலடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏகே63 படத்தில் அதிகரிக்கும் தெலுங்கு கூட்டம்!.. இது அந்த படம் மாதிரியே இருக்கே!… அதுச்சரி!…