Connect with us

நீ ஒரு படம் எடுடா பாப்போம்!.. சொல்லி அடித்த புளூ சட்ட மாறன்….

maran

Cinema News

நீ ஒரு படம் எடுடா பாப்போம்!.. சொல்லி அடித்த புளூ சட்ட மாறன்….

விமர்சனம் என்கிற பெயரில் புதிய திரைப்படங்களை தாறுமாறாக கிழித்து தொங்க போடுபவர் மாறன். தமிழ் டாக்கிஸ் என்கிற யுடியூப் சேனலில் இவர் திரைப்படங்களை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார். வழக்கமாக தமிழ் சினிமாவில் இடம் பெறும் மசாலாக்கள், அபத்தங்கள், ஒரே மாதிரியான காட்சிகள், வலுவில்லாத திரைக்கதைகள் ஆகியவற்றை செமயாக நக்கலடிப்பார். சிறந்த திரைப்படங்கள் மட்டுமே இவரிடமிருந்து தப்பிக்கும்.

இதனால், திரைத்துறையில் இவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இயக்குனர்கள் பலரும் இவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். புளூசட்ட மாறன் ஒரு படம் எடுக்கட்டும். அவன் படத்தை நானே விமர்சிக்கிறேன் என இயக்குனர் இமயம் பாரதிராஜாவே சவால் விட்டார்.

சில இயக்குனர்கள் இவர் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர். மேலும், எங்கள் படங்களை இப்படி கிண்டலடிக்கிறாயே உன்னால் முடிந்தால் ஒரு படத்தை எடுத்துக்காட்டு என பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மாறனிடம் சவால் விட்டனர்.

maran

அந்த சவாலை ஏற்ற மாறன் ‘ஆண்டி இண்டியன்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். மதம் எந்த அளவுக்கு மனிதர்களை அழிக்கிறது என்பதை தனது படைப்பில் காட்சிகளாகவும் உரையாடல்கள் மூலமாகவும் இப்படத்தில் உணர்த்தியுள்ளார் மாறன்.

இதையும் படிங்க : ஹிட்டு கொடுக்கலனா இப்படித்தான்!….பாலாவுக்கு கண்டிஷன் போட்ட சூர்யா….

சமீபத்தில் இப்படத்தை பாரதிராஜா, சீமான், சேரன், பாக்கியராஜ் உள்ளிட்ட இயக்குனர்கள் பார்த்தனர். அவர்கள் அனைவருமே படம் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா ‘எடுக்கின்ற படங்களை எல்லாம் இந்த ப்ளூ சட்டை மாறன் இப்படி நையாண்டி செய்து விமர்சனம் பண்ணி வருகிறானே.. இவன் ஒரு படம் எடுக்கட்டும் பார்க்கலாம் என நினைத்தேன்.

maran

படத்தையும் எடுத்து விட்டான். நம்பிக்கை இல்லாமல்தான் இந்த படத்தை பார்த்தேன். ஏதாவது ஒரு இடத்திலாவது அவனுக்குப் பதிலடி தருவதற்கு இடம் கிடைக்குமா என எதிர்பார்த்தேன். ஆனால், அதற்கான வாய்ப்பை எனக்கு இந்தப் படம் தரவே இல்லை. இத்தனை நாட்கள் மற்ற திரைப்படங்களை விமர்சித்து வந்த ப்ளூ சட்டை மாறன், தான் அதற்கு தகுதியான நபர்தான் என நிரூபித்துவிட்டான்’ என பாராட்டி தள்ளிவிட்டார்.

maran

மேலும், சேரன், சீமான், பாக்கியராஜ் என அனைவரும் இப்படத்தை பாராட்டி பேசியுள்ளனர். அதோடு, இப்படம் இயக்குனர் சங்கத்தில் சமீபத்தில் திரையிடப்பட்டது. அப்படத்தை பார்த்த இயக்குனர்கள் பலரும் படம் முடிந்தவுடன் எழுந்து நின்று கை தட்டியுள்ளனர்.

இந்த தகவலை செய்தியாளர்களிடம் பகிர்ந்த மாறன் ‘என் படத்தை பார்த்துவிட்டு குறையிருந்தால் சொல்லுங்கள் என்று கூறி இயக்குனர்களை அழைத்தேன். ஆனால், குறை எதுவுமில்லை என அவர்கள் கூறினர். பாரதிராஜா என்னை பாராட்டியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் இயக்குனர்களின் சவாலை ஏற்று படம் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் புளூசட்ட மாறன். ஆண்டி இண்டியன் படம் வருகிற 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top