ஜெயிலர் படத்தை வச்சு ரஜினிகாந்தையும் லியோ படத்தை வைத்து நடிகர் விஜயையும் பயங்கரமாக கலாய்த்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். ஜெயிலர் படத்தின் டிரெய்லர் சாதனையை ஒரே நாளில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் முறியடித்து விட்ட நிலையில், அதை வைத்து தற்போது மீண்டும் ரஜினிகாந்தை ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
நெகட்டிவ் விமர்சனங்களும், நெகட்டிவ் ட்வீட்களையும் போட்டே சினிமாவில் சம்பாதித்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன் என நெட்டிசன்கள் அவரை பங்கமாக கலாய்த்து வந்தாலும், தொடர்ந்து தனது வண்டியை ஓட்ட இப்படி அந்த ரசிகர்களை ஹேப்பி படுத்துவது போல ஒரு போஸ்ட்டும், இந்த ரசிகர்களை சந்தோஷப்படுத்துவது போல ஒரு போஸ்ட்டும் போட்டு பனை மரத்துல ஒரு குத்து, தென்னை மரத்துல ஒரு குத்து என அட்டகாசம் செய்து வருகிறார்.
இதையும் படிங்க: லியோல விஜய் டூப் போடாம நடிச்சி மிரட்டியிருக்காரு!.. அந்த ஹைனா யாருன்னா.. லியோ வில்லன் சொன்ன செம விஷயம்!..
லியோ டிரெய்லர் வெளியான நிலையில், அதில் இடம்பெற்றுள்ள விஜய் பேசிய ஆபாச வசனம் மற்றும் ரோகினி திரையரங்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம் என ஒரு பக்கம் அந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகள் குவிந்து வந்தாலும், விஜய் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று கூடி அதிரடியாக ஒரே நாளில் 30 மில்லியன் வியூஸ் சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர். மற்ற மொழிகளையும் சேர்த்து க்யூமிலேட்டிவ் வியூஸாக 47 மில்லியனை கடந்து விட்டதாக சன் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அதை வைத்து ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெயிலர் திரைப்படம் 2 மாதங்களில் மொத்தமாக 30 மில்லியன் வியூஸ் தான். ஆனால், 28 மணி நேரத்தில் 34 மில்லியன் பார்வைகளை கடந்து லியோ அசத்தி உள்ளது. தலீவர் என்னைக்குமே விஜய்க்கு முன்பாக ஜுஜுபி தான் என பதிவிட்டு ரசிகர்களின் சண்டையை மூட்டியுள்ளார்.
இதையும் படிங்க: படிப்பு வரலன்னா சாகணுமா?!.. மகளுக்காக மல்லுக்கட்டும் வத்திக்குச்சி வனிதா!….
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…