More
Categories: Cinema News latest news

பருந்துக்கு அவ்ளோ பயம்!.. ரஜினியை விடாமல் துரத்தும் ப்ளூ சட்டை மாறன்.. என்னென்ன சொல்றாரு பாருங்க!..

ஒரு படம் வெளியானால் அதை பார்த்து விட்டு படம் நல்லா இருக்கு, நல்லா இல்லை என பல விமர்சகர்களும் விமர்சனம் செய்வதை பார்த்துள்ளோம். ஆனால், ஒரு படத்தின் போஸ்டர் வந்தால் கூட அதை கழுவி ஊற்றி எப்படி காசு பார்ப்பது என்பதை முழு நேர தொழிலாகவே செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன் என கோலிவுட் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்துக்கு பில்டப் ப்ரோமோஷன்களை சன் பிக்சர்ஸ் ஒரு பக்கம் செய்து வரும் நிலையில், அந்த படம் ஓடிவிடக் கூடாது என்பதற்காக ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து ரஜினிகாந்த் பற்றியும் ஜெயிலர் படம் குறித்தும் ஏகப்பட்ட நெகட்டிவிட்டியை ப்ளூ சட்டை மாறன் பரப்பி வருகிறார்.

Advertising
Advertising

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க நெல்சன் நினைத்ததாகவும், அவர் வேண்டாம் வசந்த் ரவியை போடுங்க என ரஜினி தனது இன்செக்யூரிட்டியால் சொன்னதாக ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ள ”பழம்பெரும் பருந்து பதட்டப்பட்ட கதை” ட்வீட் ரஜினிகாந்த் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

பழம்பெரும் பருந்து பதட்டப்பட்ட கதை:

* ஒரு ஊரில் ஒரு பழம்பெரும் பருந்து இருந்ததாம். அதனிடம் ‘மிருகம்’ இயக்குனர் Paddy Suriyan.. ஒரு கதை சொன்னாராம். இவரது ‘மருத்துவர்’ ஹிட்டானதால்.. உடனே ஓகே சொன்னதாம் முந்தைய வேட்டைகளில் தோல்வியடைந்த பருந்து.

* ‘உங்கள் இளமைக்கால பருந்து கேரக்டரில் எனது நண்பர் CSK நடித்தால் நன்றாக இருக்கும். அவர் உங்கள் தீவிர ரசிகரும் கூட’ என கூறினாராம் Paddy Suriyan. ‘வேணாம். படம் ஹிட்டானால் அவரால்தான் ஓடியது என்று அனைவரும் சொல்வார்கள்’ என்று நோ சொல்லிவிட்டதாம் பருந்து.

* முந்தைய படங்களை போல தமிழில் மட்டும் எடுத்தால் சக ஸ்டார்களின் கலக்சனை தொட இயலாது என்பதால் பான் இந்தியா படமாக மாற்ற முடிவு செய்தனராம். ஆனால் ஃபார்மில் இருக்கும் சஞ்சய் தத், விஜய் சேதுபதி, ஃபஹத் பாஸில் உள்ளிட்ட எவரும் வேண்டாம் என்றதாம் பருந்து. காரணம்: படம் ஹிட்டானால் அவரால்தான் ஓடியது என்று அனைவரும் சொல்வார்கள். பிறகு என் கெத்து என்னாவது?’

* ஆகவே சக பழம் பருந்துகளான ஜாக்கி, சிவராஜ் ஆகியோரை ஆட்டத்தில் சேர்த்துள்ளதாம். இதற்கு முன்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரியளவில் பரிச்சயம் ஆகாத நானா படேகர், சுனில் ஷெட்டி ஆகியோரை வில்லனாக சேர்த்தது ஊரறிந்ததே.

* ‘நடிகைகளில் தற்போது ட்ரெண்டில் உள்ள ராஷ்மிகா, சமந்தாவை தேர்வு செய்யலாமா?’ என்றதற்கு ‘வேண்டாம். நீலாம்பரியும், சுறா நாயகியுமே போதும்’ என்றதாம் பருந்து. காரணம்: அதேதான்.

* ஆனால் எதிர்பாராத திருப்பமாக சுறா நாயகி ஆடிய பாடல் சூப்பர் ஹிட்டாகி, இவர் பஞ்ச் வைத்து பாடியதாக வரும் இரு பாடல்களும் கண்டுகொள்ளப்படாமல் போனதால் கடும் கடுப்பானதாம் பருந்து.

* ஆகவே ட்ரைலரில் ஒரு இடத்தில் கூட சுறா நாயகியின் முகம் தெரியக்கூடாது என்று கட்டளை போட்டு விட்டதாம் பருந்து. காரணம்: அதேதான்.

* ஒரு காலத்தில் வில்லன், நாயகி, துணை நடிகர்கள் என அனைவரும் ஸ்கோர் செய்ய வாய்ப்பு அளித்ததால் மட்டுமே பருந்தின் படங்கள் வெற்றியடைந்தன. அப்போது பகிர்ந்து வாழும் காக்கை குணம் பருந்திற்கு இருந்தது.

* ஆனால் இன்று ‘இங்க எல்லாமே நான்தான். நான் மட்டும்தான்’ என தனியே வானில் சுற்றித்திரிய முடிவெடுத்துள்ளது அப்பருந்து.

ப்ளூ சட்டை மாறனுக்குத்தான் பதற்றம்: 

தொடர்ந்து ஜெயிலர் படத்தை ஓடவிடாமல் செய்ய எவ்வளவோ முயற்சி செய்து வந்தாலும், வெளிநாடுகளில் டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஹவுஸ்ஃபுல் ஆகி வருவதையும் ரசிகர்கள் டிக்கெட்டுகளை பல்க் புக்கிங் செய்து மாலையாக அணிந்து செல்வதும், சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள பெரிய நிறுவனங்கள் மற்ற எந்த நடிகருக்கும் இல்லாமல் ரஜினி பட ரிலீசுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பதையும் பார்த்து விட்டு பதற்றத்தில் தான் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் எதை எதையோ உளறி வருகிறார் என ரசிகர்கள் வாங்குன காசுக்கு மேல கூவுறான்னு கலாய்த்து வருகின்றனர்.

Published by
Saranya M

Recent Posts