Kanguva: எலே வீரபாகு!… 58 வடைக்கு ரசீது எங்கப்பா?!… ஞானவேல் ராஜாவை கலாய்க்கும் பிரபலம்..!

Published on: November 16, 2024
---Advertisement---

58 வடைக்கு ரசீது எங்க என்று கேட்டு ப்ளூ சட்டை மாறன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கலாய்த்து இருக்கின்றார்.

சோசியல் மீடியா முழுவதும் கங்குவா திரைப்படத்தின் ட்ரோல் மற்றும் மீம்ஸ்கள் தான் அதிகம் வலம் வருகின்றது. சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

இதையும் படிங்க: Allu Arjun:’அந்த’ விஷயத்துல தளபதி விஜயை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்?

படம் இந்த அளவுக்கு விமர்சனத்தை சந்திப்பதற்கு முக்கிய காரணம் அந்த படக்குழுவினர் தான். கடந்த இரண்டரை வருடங்களாக இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா பார்த்து பார்த்து எடுப்பதாக கூறியிருந்தார்கள். ஆனால் இந்த திரைப்படத்தின் கதை பலருக்கும் புரியவில்லை என்பதுதான் உண்மை. அதிலும் நடிகர் சூர்யா முக்கியமான இரண்டு திரைப்படங்களை தவிர்த்து விட்டு கங்குவா திரைப்படத்திற்காக முழு உழைப்பையும் போட்டிருந்தார்.

ஆனால் அந்த உழைப்பிற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. படம் வெளியாவதற்கு முன்பு படக்குழுவினர் இந்தியா முழுவதும் மிகப் பிரமாண்டமாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை செய்திருந்தார்கள். மேடைக்கு மேடை படத்தைக் குறித்து ஆஹா ஓஹோ என்று பில்டப் கொடுத்து படத்திற்கு ஓவர் ஹைட் ஏத்தி வைத்திருந்தார்கள். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் கட்டாயம் தமிழ் சினிமாவின் பாகுபலி கங்குவா தான் என்கின்ற அளவிற்கு மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்தார்கள்.

Kanguva
Kanguva

அந்த நம்பிக்கையில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் மண்ணை அள்ளி கொட்டி விட்டார்கள். ரசிகர்கள் தொடங்கி சினிமா விமர்சகர்கள் வரை கங்குவா படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை கூறி வருகிறார்கள். அதிலும் ப்ளூ சட்டை மாறன் ஒரு படி மேலே சென்று மற்ற விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் கூறும் கருத்துக்களை தேடித்தேடி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.

இதற்கு முன்பு இப்படி இவர் நடந்து கொண்டதே கிடையாது என்கின்ற அளவிற்கு ஃபுல் ஃபார்மில் இருக்கின்றார் ப்ளூ சட்டை மாறன். கங்குவா படத்தின் ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் எப்படி எல்லாம் பில்டப் கொடுத்தார்களோ அதை எல்லாம் வைத்து தனிப்பட்டியல் தயார் செய்து பகிர்ந்து இருக்கின்றார். அதே நேரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவையும் அவர் விட்டு வைக்கவில்லை.

படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை பட குழுவினர் வெளியிட்டிருந்தார்கள் அதன்படி கங்குவா திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 58 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இரண்டாவது நாள் வசூல் மிகவும் மோசமாக இருக்கின்றது. உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் தான் வசூல் செய்திருக்கின்றது. மொத்தமாக இரண்டு நாட்களில் கங்குவா திரைப்படம் என்பது கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இதையும் படிங்க: Allu Arjun:’அந்த’ விஷயத்துல தளபதி விஜயை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்?

இந்நிலையில் நேற்று படக்குழு தனது முதல் நாள் வசூல் 58 கோடி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த உடனே வடை ஆரம்பம் என்று பதிவிட்டு இருந்தார்.  இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் ‘ஏலே வீரபாகு.. ஒவ்வொரு தடவையும் கலெக்ஷன் சொல்றப்ப ஜிஎஸ்டி ஆதாரத்தை வெளியிடுவேன் சொன்னியே.. 58 வடைக்கு ரசீது எங்க சீக்கிரம் சொல்லுப்பா?.. எல்லாருக்கும் ஏகப்பட்ட ஜோலி கெடக்கு..’ என்று பதிவிட்டு இருக்கின்றார். இது பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.  ரசிகர்கள் பலரும் இந்த பதிவுக்கு கீழ் தங்களது கமெண்டுகளை பறக்க விட்டு வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.