அடிச்சு கிழிச்சு தொங்க விட்டுட்டீங்களே தலைவா!.. புஷ்பா 2 படத்துக்கு ப்ளூ சட்டை விமர்சனம்..!

pushpa 2
புஷ்பா 2 திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட விமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
புஷ்பா 2:
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் புஷ்பா. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் இப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்கள். படம் வெளியாகி பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த காரணத்தால் இப்படத்தின் அடுத்த பாகத்தை எடுப்பதற்கு முடிவு செய்தார்கள்.
இதையும் படிங்க: Serial TRP: கொத்தாக உள்ளே இறங்கிய விஜய் டிவி… சன் டிவிக்கு பலமான போட்டியா இருக்கே!..
கடந்த 3 வருடங்களாக இப்படத்தின் 2-வது பாகம் எடுக்கப்பட்டு வந்தது. பின்னர் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து நேற்று தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் நேற்று வெளியானது. இந்த திரைப்படம் ப்ரீ புக்கிங்கிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்திருந்த நிலையில் படம் வெளியான நாளிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
புஷ்பா 2 விமர்சனம்:
புஷ்பா 2 திரைப்படம் வழக்கமான ஒரு மசாலா படம் என்றாலும் அல்லு அர்ஜுன். இந்த திரைப்படத்திற்கு உயிர் கொடுத்திருக்கின்றார். மொத்த படத்தையும் அவர் தனது தோளில் சுமந்து இருக்கின்றார். ஒவ்வொரு சீனிலும் அவரின் நடிப்பு பட்டையை கிளப்பி இருக்கின்றது. முதல் பாகம் எந்த அளவுக்கு சிறப்பாக இருந்ததோ அதைவிட இரண்டாவது பாகம் சிறப்பாக இருந்தது என்று ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

pushpa 2
படம் வெளியான முதல் நாளில் 175 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்திருக்கின்றது. தொடர்ந்து இப்படம் உலகம் முழுவதும் மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும் எனவும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:
எந்த திரைப்படம் வந்தாலும் அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் கூறுபவர் ப்ளூ சட்டை மாறன். அவர் புஷ்பா 2 திரைப்படத்திற்கு தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: 'முதல் பாகத்தில் எங்கு விட்டார்களோ அங்கிருந்து புஷ்பா 2 திரைப்படத்தை தொடங்கி இருக்கிறார்கள். பண பலம், படைபலம், செல்வாக்கு அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றார் புஷ்பா.
இந்த பாகத்திலும் பகத் பாஸிலுக்கும் அல்லு அர்ஜுனுக்கும் வாய்க்கா தகராறு இருந்து வருகின்றது. இந்த முறை இன்னும் அதிகமாகவே இருக்கின்றது. இந்த சமயத்தில் ஹீரோவுக்கும் அவரது மனைவிக்கும் முதல்வரை பார்த்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. புகைப்படம் எடுக்க போகும்போது முதல்வர் கடத்தல்காரன் கூட புகைப்படம் எடுக்க முடியாது என்று கூறி மறுத்து விட்டார்.

blue sattai maran
இதனால் அவமானப்பட்ட புஷ்பா அவரை அந்த பதவியில் இருந்து காலி செய்ய வேண்டும் என்பதற்காக முயற்சி செய்கின்றார். இதுதான் படத்தின் கதை. முதல் பாகம் எதுக்கு ஓடியது என்றே தெரியவில்லை. அதுவே ரொம்ப தெலுங்கு படமாக இருக்கும். உலகத்தில் உள்ள அனைத்து மாஸ் மசாலா படங்களையும் சேர்த்து இரண்டாவது பாகத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: குப்பை படத்தை வெற்றின்னு சொல்வாங்க…. காலா படம் எந்த விதத்தில் தோல்வி? சீறிய இயக்குனர்
படத்தின் முதல் பாதி ஏதோ சுமாராக இருக்கின்றது. இரண்டாவது பாதி எல்லாம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. அதிலும் படத்தின் முதல் சீனில் ஜப்பான்காரன் தமிழ்ல பேசுகிறான். ஆனால் இவர் ஜப்பான் மொழியில் பேசுகின்றார். கேட்டால் 45 நாட்களில் ஜப்பான் மொழியை கற்றுக்கொண்டாராம்.
படத்தின் இன்டெர்வல் பிளாக், ஆக்ஷன் காட்சிகள் எல்லாமே நன்றாகவே இருந்தது. இரண்டாவது பாதி முதல் பாதிக்கு அப்படியே ஆப்போசிட்டாக இருந்தது. அனைத்து காட்சிகளையும் லென்த் லென்த்தாக எடுத்து வைத்திருந்தார்கள். எல்லோரும் கூறுவது போல படத்தை அல்லு அர்ஜுன் தனது தோளில் சுமந்து இருக்கின்றார் என்பதற்கு ஏற்ப அவரது தோள்பட்டையும் ஒரு பக்கம் சைடு வாங்கி இருக்குது. முடிவாக இந்த படத்தை பார்ப்பதற்கு ஒரு மன தைரியம் வேண்டும்' என்று தனது விமர்சனத்தை பகிர்ந்து இருக்கின்றார்.