Connect with us
seenu

Cinema News

எடுக்கிறதெல்லாம் குடும்ப சித்திரம்!.. நிஜத்தில் கில்மாத்தனம் – சீனுராமசாமியை விளாசும் ப்ளூ சட்டை மாறன்

Director Seenu Ramasamy: த்ரிஷா – மன்சூர் அலிகான் விவகாரம் ஒரு பக்கம் சூடுபிடித்த நிலையில் அதனை தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி சம்பந்தப்பட்ட ஒரு விவகாரமும் இணையத்தில் கொளுந்துவிட்டு எரிகின்றது. அதுவும் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த வலைப்பேச்சு பிஸ்மியால்தான் இந்த விவகாரம் வெளியே தெரியவந்தது.

நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் ரீதியாக சீனு ராமசாமி தொல்லை கொடுத்ததாக அவர் கூறியது கோலிவுட்டில் மட்டுமில்லாமல் சமூல வலைதளங்கள் முழுவதும் பரவி பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. ஒரு சின்ன நூல் கிடைத்தால் போதும் அதை பிடித்துக் கொண்டே பங்கம் பண்ணும் ப்ளூ சட்டை மாறன் இந்த விவகாரத்தை சும்மா விடுவாரா?

இதையும் படிங்க: இருட்டு அறையில் முரட்டுக்குத்தும் பருத்திவீரனும் ஒன்னா?!.. ஞானவேல் ராஜாவை விளாசும் பொன் வண்ணன்…

வழக்கம் போல அவர் ஸ்டைலில் சீனு ராமசாமியை பற்றி விளாசி வருகிறார். இந்த நிலையில் தன்னை பற்றி வரும் செய்திகளை எப்படியாவது போலியாக்க வேண்டும் அல்லது சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக சீனு ராமசாமி எடுத்த முயற்சிகள் என்னென்ன என்பதை புட்டு புட்டு வைத்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் படுதோல்வியும் அடைந்திருப்பது சீனு ராமசாமிக்கு விழுந்த மேலும் ஒரு அடிதான்.

அதாவது வலைப்பேச்சு பிஸ்மி பிரபல பத்திரிக்கை யுடியூப் சேனலுக்கு பேட்டி அளித்ததை தொடர்ந்து எப்படியாவது பிஸ்மியை ஆஃப் செய்ய சீனு ராமசாமி முயற்சி செய்தார். ஆனால் பிஸ்மி சீனு ராமசாமியின் போனை எடுக்கவில்லையாம். இது சீனு ராமசாமியின் முதல் தோல்வி என ப்ளூ சட்டை மாறன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: விக்னேஷ் சிவனை தொடர்ந்து ஆதிக்கை டீலில் விட்ட அஜித்..! அடுத்த இயக்குனர் இவர்தானா?

அடுத்ததாக அந்த பத்திரிக்கை பிஸ்மி அளித்த பேட்டியை நீக்கியது. ஆனால் இதற்கு பின்னால் சீனு ராமசாமி இருப்பதாகவே ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் அந்த பேட்டி வீடியோ வைரலாகி அனைவருக்கும் பகிரப்பட்டு விட்டது. இது சீனு ராமசாமிக்கு இரண்டாவது தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக மனீஷா மேடையில் எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அப்படி இருக்கும் போது அவரிடம் எப்படி நான் தவறாக நடந்திருக்க முடியும் என்று ஒரு கட்டுக்கதை விட்டார் சீனு ராமசாமி. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மனீஷா அவரது இன்ஸ்டா பக்கத்தில் சபை நாகரீகம் கருதியே அவருக்கு நன்றி சொன்னதாகவும் அதற்காக அவர் ஒன்றும் உத்தமன் இல்லை என்றும் பதிவிட்டிருந்தார். அதனால் இது சீனு ராமசாமியின் மூன்றாவது தோல்வி என மாறன் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: வீட்டுக்கு போக ஆசைப்படும் ரவி.. முரண்டு பிடிக்கும் ஸ்ருதி.. அசிட் அடிக்க காத்திருக்கும் பிஜூ..!

கடைசியாக மனீஷாவிடமே சரணடைந்து விடலாம் என நினைத்து அவருக்கு ஒரு படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி தனது ஆள்களை வைத்து பேச வைத்திருக்கிறார் சீனு ராமசாமி. ஆனால் மனீஷா அதெல்லாம் நடிக்க முடியாது என பளீர் என சொல்ல இந்த நான்காவது முயற்சியும் தோல்வியில்தான் முடிந்தன.

இதையெல்லாம் குறிப்பிட்டு பேசிய ப்ளூசட்டை மாறன் ‘தப்பு செய்யாதவன் தான் தைரியமாக இருப்பான். செஞ்சவன் இந்த மாதிரி டகால்டி வேலையைத்தான் பார்ப்பான். சீனு ராமசாமியைப் பொறுத்தவரைக்கும் அவர் எடுக்கிற படங்கள் எல்லாம் குடும்ப சித்திரம். வெளியில் போடுவது குணச்சித்திரம். ஆனால் நிஜத்தில் கில்மாத்தனம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top