இந்த சுவரு இன்னும் எத்தன பேர காவு வாங்க போகுதோ- புளுசட்ட மாறனுக்கு ரொம்ப குசும்புதாங்க...
தளபதி விஜய் நடிப்பில் , டாக்டர் திரைப்பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இன்று கோலாகமாக வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகிபாபு என பலர் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் காமெடி கலந்து இருக்கும் என எதிர்பார்த்து ரசிகர்கள் தியேட்டருக்கு வருகின்றனர்.
ஆனால் கலவையான விமர்சனங்களையே பீஸ்ட் படம் பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் விஜய ரசிகர்களே இந்த படத்தை பெரிதும் ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.
பீஸ்ட் விமர்சனத்தை பலர் சொன்னாலும் ஒரு நபரின் விமர்சனத்திற்காக பலரும் காத்திருந்தனர். இன்று அந்த விமர்சன வீடியோ வெளியானது. அது புளுசட்டை மாறனின் விமர்சன வீடியோதான். அந்த வீடியோவில் பீஸ்ட் படத்தினை கலாய்த்து தள்ளியுள்ளார்.
அதில் விஜயகாந்த்,அர்ஜூன் போன்றோர்களே இந்த கதையை வேண்டாம் எனக்கூறி விஆரெஸ் வாங்கி விட்டார்கள் என்றும், நல்ல டான்ஸ், ஸ்டண்ட் தெரிந்த விஜய்க்கே இந்த நிலைமை என்றால் அடுத்து ரஜினி என்ன செய்யபோகிறாரோ என்று நக்கல் அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த சுவர் இன்னும் எத்தன பேர காவு வாங்க போகுதோ என்று மறைமுகமாக நெல்சனை கலாய்த்துள்ளார். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...