விஜய்க்கு அஜித்னா!.. கமலுக்கு ரஜினிகாந்த்!.. இவ்வளவு இன்செக்யூரிட்டியா?.. புளூ சட்டை மாறன் தாக்கு!

ஜூன் 21-ஆம் தேதி நடிகர் அஜித் ரேஸ் கார் ஓட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஜூன் 22-ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டு விஜய் ஒரு விஷயத்தை செய்தால் அதற்கு போட்டியாக நாமும் ட்ரெண்டிங்கில் வர வேண்டும் இன்று இன்னமும் அஜித் நினைத்து வருவதுபோல கமல்ஹாசன் ட்ரெண்டிங்கில் இருந்தால் ரஜினிகாந்தும் உடனடியாக ஓடி வந்து விடுவார் என புளூ சட்டை மாறன் கலாய்த்து உள்ளார். நடிகர் விஜய் கள்ளக்குறிச்சிக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து வந்தது […]

By :  Saranya M
Update: 2024-06-26 09:00 GMT

ஜூன் 21-ஆம் தேதி நடிகர் அஜித் ரேஸ் கார் ஓட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஜூன் 22-ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டு விஜய் ஒரு விஷயத்தை செய்தால் அதற்கு போட்டியாக நாமும் ட்ரெண்டிங்கில் வர வேண்டும் இன்று இன்னமும் அஜித் நினைத்து வருவதுபோல கமல்ஹாசன் ட்ரெண்டிங்கில் இருந்தால் ரஜினிகாந்தும் உடனடியாக ஓடி வந்து விடுவார் என புளூ சட்டை மாறன் கலாய்த்து உள்ளார்.

நடிகர் விஜய் கள்ளக்குறிச்சிக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து வந்தது மிகப்பெரிய அளவில் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வந்த நிலையில், உடனடியாக அஜித் ரேஸ் கார் ஓட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது டீம் மூலம் சோசியல் மீடியாவில் இறக்கி வைரல் ஆக்கினார்.

இதையும் படிங்க: இந்த போஸ் எப்படி இருக்கு? வெளியான ரஜினியின் நியூ லுக்.. பக்கத்துல யார் நிக்குறாங்கனு பாருங்க

இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ஊரே அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நிலையில், உடனடியாக எந்த ஒரு சம்பந்தமும் இன்றி ரசிகர்களே அப்டேட் கேட்காத நிலையில் திடீரென லோகேஷ் கனகராஜை வைத்து கூலி படத்தின் கெட்டப் ஸ்டில்லை ரஜினிகாந்த் ரிலீஸ் செய்ய சொல்லி இருக்கிறார் என புளூ சட்டை மாறன் அஜித் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்கும் உள்ள இன்செக்யூரிட்டியை அம்பலப்படுத்தியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள ரஜினிகாந்தின் கூலி படத்தின் கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் இதற்கு முன் கூலி படத்தின் அறிமுக டீசரில் காட்டப்பட்ட கெட்டப் நல்லா இருந்தது என்றும் இந்த கெட்டப்பை பார்த்தால் காலா படம் ரஜினிகாந்த் போலவே இருக்கிறார், பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை என வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: சிவாஜி படத்தை ரீமேக் செய்து கையை சுட்டுக்கொண்ட துயரம்… அட தயாரிப்பாளர் அந்த நடிகரா?..

கூலி படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் திடீரென வெளியேறிவிட்டதாக சோசியல் மீடியாவில் சிலர் கொளுத்திப் போட்ட நிலையில், அதற்காகத்தான் பதறி அடித்துக்கொண்டு லோகேஷ் கனகராஜ் இப்படி ஒரு ஸ்டில்லை தற்போது வெளியிட்டு ரஜினிகாந்தின் அடுத்த படத்தை தான் இயக்கப் போகிறேன் என்பதை அறிவிக்கவே இப்படி செய்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

அட்லி இயக்கத்தில் சல்மான்கான் மற்றும் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்திலிருந்து ரஜினிகாந்த் வெளியேறிவிட்டதாக திடீரென வதந்திகள் கிளம்பியது தான் இப்படி ஒரு ஸ்டில் வருவதற்கான காரணம் என்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் டிரெண்டை மடை மாற்ற இல்லை என்றும் சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: நாளைக்கு ரிலீஸ்.. ரீல காணோம் கதையா இருக்கு ‘கல்கி’ படத்தோட நிலைமை! என்ன மேட்டர் தெரியுமா?

Tags:    

Similar News