நல்லா சொன்னீங்க!.. விஜய் அரசியல் இப்படித்தான் இருக்குமா? புளூ சட்டை மாறன் போட்ட பதிவு

Published on: February 2, 2024
blue
---Advertisement---

Actor Vijay: இன்று தனது கட்சியின் பெயரை அறிவித்து விஜய் தன் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார். இதுவரை அரசியல் முன்னெடுப்புகளை நோக்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்த விஜய் இன்று கட்சியின் பெயரை அறிவித்ததுடன் இனிமேல் முழு அரசியல் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

அரசியல் என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு விளையாட்டு இல்லை. அதில் தீவிரமாக செயல்பட போகிறேன் என்று கூறி தற்போது கோட் படத்தில் நடிக்கும் விஜய் அந்த படத்திற்கு பிறகு சில காலம் படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: சைக்கோ வேடத்தில் மிரட்டிய தமிழ் சினிமா நடிகர்கள்!.. மறக்க முடியாத ராட்சசன்!..

இது அவரின் சினிமா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக மாறியிருக்கிறது. கோலிவுட்டில் அதிக விசில் அடித்து நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடும் திரைப்படமாக விஜய் படம் தான் இன்றுவரை இருந்து வந்துள்ளது. இப்போது அவர் வெளியிட்ட இந்த அறிக்கையால் ரசிகர்கள் கொஞ்சம் மனவருத்தத்திலும் உள்ளனர்.

இந்த நிலையில் ப்ளூசட்டை மாறன் விஜய் குறித்து அவருடைய பதிவை வெளியிட்டிருக்கிறார். அதாவது ரஜினியை போல் 25 வருடமாக அரசியலுக்கு வருவேன் வருவேன் என சொல்லி ஏமாற்றவும் இல்லை. கமலை போல் பார்ட் டைம் அரசியலையும் செய்வதாக இல்லை.

இதையும் படிங்க: அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்!.. ஷங்கர் கொடுத்த சரியான பதிலடி!.. எப்பவும் மறக்க மாட்டாரு!..

ரஜினி , கமலுடன் ஒப்பிடும் போது விஜய் எவ்வளவோ மேல். மேலும் யாருக்கு எதிராக விஜய் நிற்கப் போகிறார்? அவருடைய கொள்கைதான் என்ன என்பதை பொறுத்தே அவரை விமர்சிக்கவும் பாராட்டவும் செய்ய முடியும். மேலும் விஜயின் அரசியல் ஸ்டாலின் vs விஜய் அல்லது உதயநிதி vs விஜய் என எப்படி மாறப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என ப்ளு சட்டை மாறன் கூறியிருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.