பெரியண்ணாவுக்கு பெரிய மரியாதை.. ஒரு நிமிஷம் நின்னு அஞ்சலி செலுத்த முடியாதா சூர்யா?.. ப்ளூ சட்டை பொளேர்!

Published on: December 30, 2023
---Advertisement---

கேப்டன் என தமிழ் சினிமாவே கொண்டாடிய விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது அனைத்து நடிகர்களையும் ஒன்று திரட்டி வெளிநாடுகளில் நிகழ்ச்சி எல்லாம் நடத்தினார். ஆனால், அவரது மறைவுக்கு பல நடிகர்கள் இப்போ வெளிநாட்டில் இருந்து கொண்டு அஞ்சலி செலுத்தக் கூட வர முடியாத சூழலில் வீடியோக்களையும், ஆடியோக்களையும், ட்வீட்களையும் போட்டு வருகின்றனர்.

பல பிரபலங்கள் உள்ளூரில் இருந்துக் கொண்டே எட்டிப் பார்க்காமல் இருந்து விட்டனர் என்கிற குற்றச்சாட்டுகளும் கிளம்பி உள்ளன. விஜயகாந்த் உடல்நலக் குறைவாக இருக்கும் போதே எந்தவொரு பிரபலமும் அவரை கண்டுக் கொள்ளவே இல்லை.

இதையும் படிங்க: பாவம்.. நயன்தாராவுக்கு நேரமே சரியில்லை!.. ஓடிடி ரிலீஸிலும் இப்படியொரு சிக்கலா?..

நடிகர் விஜய் ஒரு வருஷமா விஜயகாந்தை சந்திக்க முயற்சி செய்தும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறுகின்றனர். ஆனால், செந்தூரப் பாண்டி படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த விஜய் சிறு வயதில் இருந்தே விஜயகாந்தை பார்த்து வளர்ந்தவர் தான். அந்த நன்றி மறக்காமல் இரவு நேரத்தில் அத்தனை கூட்டத்தின் மத்தியிலும் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றார்.

 

ஆனால், சூர்யாவுக்கு பெரியண்ணா படத்தின் மூலம் நல்ல அறிமுகம் கொடுத்த விஜயகாந்துக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த வில்லை என்றாலும், ஓடுற காரில் சூர்யா போட்ட வீடியோவை கண்டித்து ப்ளூ சட்டை மாறன் திட்டியுள்ளார். ஒரு நிமிடம் அந்த காரை நிறுத்தி விட்டுக் கூட விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செலுத்த முடியாத சூர்யா எனக் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஒரு படத்துக்கு இனி 70 ரூபாய் தான் டிக்கெட்டா?.. பிவிஆர் சர்ப்ரைஸ்.. எப்படி தெரியுமா?

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.