திருப்பூர் சுப்ரமணியத்தை பார்ட் பார்டாக போட்டு கிழித்த ப்ளூ சட்டை?!… ரவுண்டு கட்டி அடிக்கிறாரே!…

Published on: November 22, 2024
bluesattaimaran
---Advertisement---

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்தை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து இருக்கின்றார்.

கங்குவா திரைப்படத்தின் விமர்சனம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. கங்குவா படத்தின் வசூல் சரிவுக்கு மோசமான விமர்சனங்கள் தான் காரணம் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அவர் மட்டும் இல்லாமல் பல திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகிஸ்தர்களும் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தார்கள்.

இதையும் படிங்க: சீன் காட்டிய நயன்… குட்டி ஸ்மைலுடன் தனுஷுடன் நின்ற எஸ்கே… இதுதாங்க கெத்து?!!

இதனால் திரையரங்கிற்கு உள்ளேயும், வெளியேயும் இனி youtube சேனல்களுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் சங்கமும் திரையரங்கு உரிமையாளர் சங்கமும் கோரிக்கை வைத்திருக்கின்றது. இதற்கு தொடர்ந்து பல யூடியூபர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் திருப்பூர் சுப்ரமணியம் அளித்த பேட்டிக்கு சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் கடுமையான பதிலடி கொடுத்திருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “கொரோனா காலத்தில் மாஸ்டர் படத்திற்கு 50% மக்கள் மட்டுமே அனுமதி என்று அறிவித்தது. அதன்படி திரையரங்கில் 50 பேரை மட்டும் அனுமதித்தார்கள். ஆனால் ஒரு டிக்கெட் விலையில் இரண்டு மடங்கு உயர்த்தி விற்றார்கள்.

செய்தி சேனல்கள் கேட்டதற்கு பக்கத்தில் உள்ள காலி இருக்கையில் ஹேண்ட்பேக் உள்ளிட்ட பொருள்களை மக்கள் வைத்துக் கொள்வதற்கு இந்த கட்டணம் என்று கூறினார்கள். இப்படி பகல் கொள்ளையையும், அதற்கு ஒரு வினோதமான காரணத்தையும் சொல்லி கேட்டதுண்டா? இது தரம் தாழ்ந்த செயல் இல்லையா?

சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் சன்னி லியோன் நடித்த கடார் 2 ஹிந்தி படம் ரிலீஸானது. பருப்பூரில் வடமாநில தொழிலாளிகள் அதிகம் என்பதால் ஹிந்தி படங்களுக்கு மவுஸ் உண்டு. ஆகவே இப்படம் வெளியான போது நள்ளிரவு 1.35 மணி ஷோவுக்கு ஆன்லைன் புக்கிங் இவரது ஸ்ரீ பக்ரீ சினிமாஸ் தியேட்டரில் ஓபன் ஆனது. தமிழக அரசு அனுமதிப்படி காலை 9 மணிக்கு தானே முதல் ஷோ போட வேண்டும்.

இந்த விதியை இவரது தியேட்டர் மட்டும் மீறியது சரியா? இதை கேட்க நள்ளிரவு ஷோ புக்கிங் நீக்கிவிட்டார். பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே, ஜெய் பீம், சூரரைப் போற்று போன்ற படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீசான போது உச்சகட்டமாக கொந்தளித்தவர் நம்ம பருப்பூர் சுப்பு. இதனால் தியேட்டர் வருமானம் பாதிக்கப்படுகிறது. இனி சூர்யா குடும்பம் நடிக்கும் எந்த படத்தையும் திரையரங்கில் வெளியிட மாட்டோம் என்று சபதம் போட்டார்.

இதையும் படிங்க: உங்க டெடிகேஷனுக்கு அளவு இல்லையா ஐஸ்வர்யாஜி? ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டோம்

சில வாரங்களில் அந்த சபதம் காட்டில் கரைந்து போனது. அன்று விமர்சகர்கள் ஒரு படத்தை பாராட்டுவதால் அந்த படம் ஓடாது. அதேபோல அவர்கள் திட்டுவதால் ஒரு படம் தோற்காது. ஆனால் இன்று இந்தியன் 2, வேட்டையன், கங்குவா தோல்விக்கு விமர்சனம் தான் காரணம். வாழைப்படம் வந்தபோது பருப்பூர் சுப்பு பேசியது சிறுவயதில் வாழைத்தார் சுமந்தோம்.

வலிகளை சுமந்தோம் எனக் கூறும் இந்த இயக்குனர்கள் இப்போது கோடி ரூபாய் மதிப்பிற்கும் பென்ஸ் காரில் வந்து இறங்குகிறார்கள். பா ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்கள் வரும்போது அவர்களை விமர்சிப்பதும், சூர்யா படம் வந்தால் அதற்கு ஆதரவாக நின்று விமர்சனங்களை எதிர்ப்பதும் எந்த வகையான பாசம்? மற்ற நடிகர்கள் இயக்குனர்கள் காஸ்ட்லி காரில் வராமல் கட்ட வண்டியிலா வருகிறார்கள்’ என்று திருப்பூர் சுப்ரமணியத்தை கிழித்து தொங்க விட்டிருக்கின்றார் ப்ளூ சட்டை மாறன்

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.