பெரிய சிஐடி சங்கர்: மைக் முன்பு தொண்டை கிழிய‌ கத்துபவர்: விஜயை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய புளு சட்டை மாறன்

by சிவா |   ( Updated:2025-04-06 10:30:30  )
blue sattai maran-vijay
X

நடிகர் விஜயை திரைப்பட விமர்சகர் புளு சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் விஜய். தற்போது ஜனநாயகன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஹெச். வினோத் இயக்கிவரும் இப்படம் தான் இவரின் கடைசி திரைப்படம் என்று கூறப்படுகின்றது. இப்படத்தை முடித்த கையோடு முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறியிருக்கின்றார் விஜய்.

தேர்தல் நெருங்க நெருங்க விஜய் பேச்சில் தற்போது அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். சமீபத்தில் கூட திமுக பாஜகவுடன் ரசிய கூட்டணி வைத்துள்ளது என்ற இவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய அரசு சமீபத்தில் வக்ஃபு சட்ட திருத்த மசோதா குறித்து வாக்கெடுப்பு நடத்தியது. இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் புளு சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் தவெக கழக தலைவர் விஜயை கடுமையாக சாடியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில்,

ரெண்டு பேரும் ரகசிய கூட்டணி வச்சி.. நாடகம் போடறாங்க என திமுக - பாஜக குறித்து கொக்கரித்தார் விஜய். ஆனால்..

  • EPS, செங்கோட்டையன் டெல்லி செல்கிறார்கள். அமித் ஷாவை சந்திக்கிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிறது.
  • வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித்துள்ளார் 'ஒரே ஒரு குருக்கள் ' ஜி.கே.வாசன்.
  • வாக்கெடுப்பை புறக்கணித்து எஸ்கேப் ஆனார் அன்புமணி.
  • வாக்கெடுப்பு நடந்த நாளில் டெல்லி சென்ற இளையராஜா.. வாக்களித்தாரா இல்லையா என்பது மர்மமாக உள்ளது.
  • இஸ்லாமியர்களை பாதிக்கும் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிப்பதில் இவர்களுக்கு என்ன சிக்கல்?
  • தமிழக மக்களிடம் கெட்ட பெயர் வரக்கூடாது. மேலிடத்தையும் பகைத்துக்கொள்ள கூடாது எனும் இரட்டை‌வேடம்தானே இது?
  • இன்று சென்னையில் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்ததாக செய்தி வந்துள்ளது‌.
  • இதில் ஒன்றுகூட பனையூர் பண்ணையாரின் கண்களுக்கு தெரியவில்லையா?
  • இவர்கள் எல்லாரும் போடும் நாடகத்திற்கு என்ன பெயர்? மைக் முன்பு தொண்டை கிழிய‌ கத்துபவர்.. இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்?
  • இவர்கள் எல்லாம் உங்கள் தீம் பார்ட்னர்கள் ‌என்பதால்தானே.
  • பெரிய சிஐடி சங்கர். ரகசிய கூட்டணியை கண்டுபுடிச்சி ஊருக்கு சொல்றாராம்.
  • இப்ப வாயை தெறங்க ப்ரோ என்று கூறியுள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை கமெண்டுகளாக் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story