தீபாவளிக்கு ஜப்பான் வருது!.. அடுத்து கார்த்தியை வம்பிழுப்போம்.. பக்காவா ரூட்டு போட்ட ப்ளூ சட்டை மாறன்!

by Saranya M |   ( Updated:2023-11-04 09:57:36  )
தீபாவளிக்கு ஜப்பான் வருது!.. அடுத்து கார்த்தியை வம்பிழுப்போம்.. பக்காவா ரூட்டு போட்ட ப்ளூ சட்டை மாறன்!
X

ஜப்பான் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மெட்ராஸ் படத்தில் கார்த்தி நடித்தது குறித்த கேள்வி எழுந்தது. ஜாதிப் படத்தில் ஏன் நடிக்கிறீங்க என கேட்ட போது, மெட்ராஸ் படத்தை ஜாதிய படமாக நான் பார்க்கவில்லை என்றும், மெட்ராஸில் இருப்பவர்கள் யாருமே ஜாதிப் பார்த்து பழக மாட்டார்கள் என்றும் பதில் கொடுத்திருந்தார்.

அண்ணன் சூர்யா காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். நீயாவது உங்க அம்மாவுக்கு பிடித்த மாதிரி ஜாதியில ஒரு பொண்ணா பார்த்து திருமணம் செஞ்சுக்கோ கார்த்தி என சிவகுமார் சொன்னதால் தான் கார்த்தி தன்னுடைய ஜாதியிலேயே பெண் பார்த்து திருமணம் செய்துக் கொண்டார் என்கிற விமர்சனங்களையும் நெட்டிசன்கள் கிளப்ப ஆரம்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: கம்பேக் கொடுக்கப் போறாரா கார்த்திக் சுப்புராஜ்!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டிரெய்லர் தரமா இருக்கே!..

நடிகை தமன்னாவுடனான காதலையும் கார்த்தி மறந்து விட்டு அம்மாவுக்காகவும் அப்பாவுக்காகவும் திருமணம் செய்துக் கொண்டார் என்றும் கிளப்பி விட்டுள்ளனர்.

இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் ஜப்பான் படம் வரும் நேரம் இவரை வம்பிழுத்தால் தான் தீபாவளி வாரத்தில் காசு பார்க்க முடியும் என நினைத்து கிளம்பி விட்டார்.

இதையும் படிங்க: ஜெயிலர் என்ன? பொன்னியின் செல்வன் ரிக்கார்டையே பிரேக் செஞ்ச லியோ!

”நான் ஜாதி பார்ப்பதில்லை என்று சினிமா நிகழ்ச்சி மேடையில் பொய் சொல்வான். ஆனால் தன் ஜாதியிலேயே திருமணம் செய்து கொள்வான்.

அவன் யார்?” என கேள்விக் கேட்டு இம்சை அரசன் படத்தின் போஸ்டரையும் வெளியிட்டு கலாய்த்துள்ளார். அவரது ட்வீட் கீழே கமெண்ட் பக்கத்தில் நடிகர் சூர்யா ரசிகர்கள் மற்றும் கார்த்தி ரசிகர்கள் கண்டபடி திட்டி வருகின்றனர்.

Next Story