பொம்மை படமா இது!.. சந்திரமுகி 2 வை பங்கமாய் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…
தமிழில் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார் ரஜினிகாந்த். அதற்கு தகுந்தார் போல அவரது திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு அதிக இடைவெளி விட்டு தற்சமயம் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். அதனைத் தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ரஜினி நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் சந்திரமுகி.
சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடி ஹிட் கொடுத்தது. அந்த திரைப்படம் இயக்குனர் வாசுவிற்கும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் சந்திரமுகி இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் வாசு. வடிவேலு காமெடிக்கு சந்திரமுகி முதல் பாகத்திலேயே பெரும் வரவேற்பு இருந்ததால் இந்த படத்திலும் வடிவேலுவை நடிக்க வைத்துள்ளார் வாசு.
வெளிவந்த போஸ்டர்:
ஆனால் ரஜினியை இந்த படத்தில் கதாநாயகனாக போட முடியவில்லை ரஜினி வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸை கதாநாயகனாக நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் பி வாசு. தற்சமயம் இந்த படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. மேலும் படம் வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று வெளியிட்டு தேதியையும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் படத்தின் போஸ்டர் அவ்வளவாக ஈர்ப்பை ஏற்படுத்தும் விதமாக இல்லை. இது குறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறும் பொழுது இந்த போஸ்டர் பார்ப்பதற்கு ஏதோ கார்ட்டூன் திரைப்படத்தின் போஸ்டர் போல உள்ளது என்று கலாய்த்துள்ளார்.
இதையும் படிங்க:மறைந்தும் வாழும் தெய்வம் எம்ஜிஆர்! இக்கட்டான சூழலில் இருந்த விஜயகுமாரிக்கு சின்னவர் செய்த பேருதவி