Kanguva: கங்குவா பட டிஸ்கஷன் இப்படிதான் நடந்திருக்கும்?!... இப்படி கலாய்ச்சா எப்படி ப்ரோ!.. தரமான செய்கை!..

by ramya suresh |
Kanguva: கங்குவா பட டிஸ்கஷன் இப்படிதான் நடந்திருக்கும்?!... இப்படி கலாய்ச்சா எப்படி ப்ரோ!.. தரமான செய்கை!..
X

#image_title

கங்குவா படத்தின் டிஸ்கஷன் போது எப்படி பேசி இருப்பார்கள் என்பதை கற்பனையாக ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருப்பது செம வைரலாகி வருகின்றது.

சூர்யா நடிப்பில் உருவாகி இருந்த கங்குவா திரைப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. எப்போது இந்த திரைப்படம் வெளியாகும் என்று அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால் இன்று வெளியான கங்குவா படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். படம் குறித்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஏகப்பட்ட பில்டப்புகளை கொடுத்து படத்தின் எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்திருந்தார்கள்.

அவை அனைத்தையும் சுக்கு நூறாக நொறுக்கி விட்டார்கள் கங்குவா படக்குழுவினர். படம் வெளியானது முதலே ரசிகர்கள் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை முன்வைத்து வருவதால் படத்தின் வசூல் பாதிக்கும் என்று கூறப்படுகின்றது. சூர்யா மற்றும் ஞானவேல் ராஜா கொடுத்த பில்டப்புக்கு படம் வொர்த் இல்லை என்பது பலரின் எண்ணம். அதிலும் காலையிலிருந்து விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஃபுல் ஃபார்ம்யில் இருந்து கொண்டிருக்கின்றார்.

இதையும் படிங்க: கங்குவா படம் முழுக்க ஏன் கத்துறாங்க தெரியுமா?!… இதுதான் விஷயமா?… புட்டு புட்டு வச்ச பிரபலம்!..

காலை படம் வெளியானது முதலே படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார். பொதுவாக எந்த திரைப்படம் வெளியானாலும் அவரின் விமர்சனத்திற்கு காத்திருப்பது வழக்கம் தான். ஆனால் இந்த சமயம் கேப்பே விடாமல் அடித்து நொறுக்கி கொண்டிருக்கின்றார் ப்ளூ சட்டை மாறன். இவரின் ஒவ்வொரு பதிவும் சூர்யா ரசிகர்களை கடுப்பேற்றி வருகின்றது.

bluesattaimaRan

bluesattaimaRan

ஆனால் அவர் மட்டுமல்ல ரசிகர்களும் படம் குறித்து நெகட்டிவான விமர்சனங்களை தான் முன்வைத்து வருகிறார்கள். மேலும் தமிழ் சினிமாவை சேர்ந்த பல சினிமா விமர்சகர்கள் படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை கூறி வருவது படத்திற்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதிதாக ப்ளூ சட்டை மாறன் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார்.

அதில் இப்படத்தின் ஸ்டோரி டிஸ்கஷன் எப்படி நடந்திருக்கும் என்பதை அவரே கற்பனையாக உருவாக்கி இருக்கின்றார். சூர்யாவும் சிறுத்தை சிவாவும் எப்படி படம் குறித்து விவாதித்து இருப்பார்கள் என்பதை பகிர்ந்து இருக்கின்றார். ஸ்டோரி டிஸ்கஷன் நடந்த போது சிங்கம்: நான் உடனே பான் இந்தியா ஸ்டாராக மாறனும். அதுபோல ஒரு கதை இருக்கா?

இதையும் படிங்க: Kanguva: லக்கி பாஸ்கர் டீம்கிட்ட ஞானவேல் ராஜா கத்துக்கணும்!.. கொஞ்சமா பேசினாரு!…

சிறுத்தை: ரெண்டு வகையான மாவு தான் நம்ம நாட்டுல இருக்கு.. ஒன்னு பாகுபலி, RRR போன்ற கற்பனை கதைகள்.. இல்லைனா புஷ்பா, கேஜிஎப் மாதிரி தாடி துப்பாக்கி போன்ற கதை.. இதுல உங்களுக்கு எது வேணும். சிங்கம் நான் ஒரே படத்துல பிரபாஸ், யஷ் ரேஞ்ச தொடணும். சிறுத்தை: நோ ப்ராப்ளம் சார், ஜடாமுடி கங்குவா.. கோன் ஐஸ் தாடி பிரான்சிஸ் டபுள் ரோல்..

சிங்கம்: சோலிமுடிஞ்சது.. என்று பதிவிட்டு இருக்கின்றார். இதில் இவர் சிங்கம் என்று குறிப்பிட்டு இருந்தது சூர்யாவையும், சிறுத்தை என்று சொன்னது இயக்குனர் சிவாவையும் தான். இந்த ஸ்டோரி டிஸ்கஷன் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

Next Story