ஐயா உங்களுக்கு எல்லாம் இதயமே இல்லியா!.. அல்லு அர்ஜுனையும் விடாது வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!..

69வது தேசிய விருதுகள் அறிவிப்பு ஆகஸ்ட் 24ம் தேதி மாலை வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான விருது புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது. விருது அறிவிப்பு வெளியான உடனே புஷ்பா படக்குழுவுடன் அல்லு அர்ஜுன் ஆனந்தக் கண்ணீர் விட்டுக் கொண்டாடிய வீடியோக்கள் வெளியாகின.
இந்நிலையில், ஜெயிலர் படத்தை கடந்த ஒரு மாத காலமாக புரட்டி எடுத்து போர் அடித்த நிலையில், பழைய பேஷன்ட் ரஜினியை டிஸ்சார்ஜ் பண்ணு, புதுப்பேஷன்ட் அல்லு அர்ஜுனை அட்மிட் பண்ணு என ஆந்திராவிலும் சென்று வம்பு வளர்த்துள்ளார்.
இதையும் படிங்க: 5 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய ராஜமவுலி படம்!.. குவியும் பாராட்டுக்கள்!…
தமிழ் ஹீரோக்களுக்கு மிஸ்ஸான தேசிய விருது:
2011ம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், போட்டியில் ஜெய்பீம் படத்துக்காக சூர்யா, சார்பட்டா படத்துக்காக ஆர்யா, கர்ணன் படத்துக்காக தனுஷ், ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பலர் சிறந்த நடிகருக்கான போட்டியில் இருந்தனர்.
சிறந்த ஹீரோயின் என கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்த ஆலியா பட் மற்றும் மிமி படத்தில் வாடகைத்தாயாக நடித்த ஆதிபுருஷ் ஹீரோயின் கிரித்தி சனோன் உள்ளிட்ட இருவருக்கும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுகள் ஷேர் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஸ்டூடியோவில் அடிதடி சண்டை போட்ட யேசுதாஸ் – துண்ட காணோம்னு ஹார்மோனியத்த தூக்கிட்டு ஓடிய தேவா!
அல்லு அர்ஜுனையும் விடாத ப்ளூ சட்டை:
ஆனால், சிறந்த நடிகருக்கான விருது போட்டியில் இத்தனை நடிகர்கள் இருந்த நிலையிலும், புஷ்பா படத்தில் ஒரு ஷோல்டரை மட்டும் இறக்கி நடித்த அல்லு அர்ஜுனுக்கு விருது கொடுத்துட்டீங்களே என சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ட்ரோல்கள் வெளியாகி உள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறனும் தன் பங்குக்கு பங்கமாக கலாய்த்துள்ளார்.
”ஐயா உங்களுக்கு எல்லாம் இதயமே இல்லியா” என கவுண்டமணியின் மீமை போட்டு சிறந்த நடிகர் - அல்லு அர்ஜுன் என பதிவிட்டு கலாய்த்துள்ளார். ப்ளூ சட்டை மாறன் கமெண்ட் பக்கத்தில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வந்து அசிங்க அசிங்கமாக திட்டி வருகின்றனர்.
Best Actor - Allu Arjun. pic.twitter.com/MYnKpBYsz4
— Blue Sattai Maran (@tamiltalkies) August 24, 2023