உங்கள மாதிரி அமீர் ஒண்ணும் பிட்டு படம் எடுக்கல!.. ஞானவேல் ராஜாவை தாக்கிய ப்ளூ சட்டை மாறன்!..

by Saranya M |   ( Updated:2023-11-27 20:58:05  )
உங்கள மாதிரி அமீர் ஒண்ணும் பிட்டு படம் எடுக்கல!.. ஞானவேல் ராஜாவை தாக்கிய ப்ளூ சட்டை மாறன்!..
X

இயக்குனர் அமீர் என்ன பாரதிராஜாவா? என ஞானவேல் ராஜா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அடுத்த நொடியே கன்டென்ட் சிக்கியது என ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல அவரை வைத்து செய்து வருகிறார். அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இடையே கிட்டத்தட்ட 15 வருஷமா பனிப்போர் நிலவி வந்த நிலையில், அது தற்போது ரியல் போராக மாறி வெடித்துள்ளது.

பருத்திவீரன் படத்தை அமீர் இயக்கி நடிகர் கார்த்தியை தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக தந்த பாவம் இன்னமும் அவரை சுற்றி அடித்து வருகிறது.

இதையும் படிங்க: படத்தில் நடிக்க எம்.எஸ்.வி போட்ட ஒப்பந்தம்! எல்லாம் அந்த ஒருத்தருக்காகத்தான் – மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்

அமீர் இயக்கிய ராம் படம் படு மொக்கையான படம் என சுதா கொங்கராவே கலாய்த்து விட்டார் என ஞானவேல் ராஜா தேவையில்லாமல் வாய் விட்டு சுதா கொங்கராவின் இமேஜையும் டேமேஜ் செய்து விட்டார். அவர் உடனடியாக தன்னை தற்காத்துக் கொள்ள அமீர் தான் என் குலசாமி ரேஞ்சுக்கு பில்டப் போட்டு ஒரு ட்வீட்டையும் போட்டு விட்டார்.

ஆனால், அதில் கூட ராம் படத்தை நைஸாக கழட்டி விட்டு பருத்திவீரனையும் முத்தழகையும் மட்டுமே பாராட்டி உள்ளார். இந்நிலையில், அடுத்து பாரதிராஜாவுடன் கோர்த்து விட்டு வேடிக்கை பார்ப்பது என்ன வன்மமோ தெரியவில்லை.

இதையும் படிங்க: இந்த அழகை காட்டியே மயக்கிப்புட்ட!.. பிரியா பவானி அழகில் சொக்கிப்போன புள்ளிங்கோ…

இதுதான் சமயம் என நினைத்த ப்ளூ சட்டை மாறன், அமீருக்கு பாரதிராஜா அளவுக்கு சீன் இல்லை தான். நீங்க தயாரிச்ச, ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, பல்லு படாம பாத்துக்க மாதிரி பிட்டு சீன் படங்கள் எடுக்கல தான்.. ராம், மௌனம் பேசியதே, பருத்திவீரன் படங்களை தான் எடுத்தாரு பாவம் என பங்கம் பண்ணி வருகிறார்.

Next Story