தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் ஒரு குடும்ப படம் வந்தால் வரிசையாக குடும்ப படங்களும், போலீஸ் படம் வந்தால் தொடர்ந்து போலீஸ் படங்களாகவும், பேய் படம் வந்தால் தொடர்ந்து பேய் படமாகவும் வந்துக் கொண்டிருக்கும்.
ஆனால், சமீப காலமாக அந்த கணக்கெல்லாம் காலம் மாறி போய்விட்டது. தொடர்ந்து வரும் படங்கள் எல்லாம் அடிதடி சண்டை காட்சிகளுடன் பெரிய பெரிய துப்பாக்கிகளுடனும், கத்தி, வில்லு என ஆயுதங்களுடன் ஹீரோ ஒருத்தரே 1000 பேர் வந்தாலும் அடித்து நொறுக்கும் படங்களாகவே உருவாகி வருவது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது என ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள லேட்டஸ்ட் ட்வீட்டில் வெளுத்துள்ளார்.
இதையும் படிங்க: அது ஃபேக்!.. பிரதீப் ஆண்டனி சோஷியல் மீடியா ஐடின்னு ஃபயர் விடாதீங்க.. எல்லாமே போலியாம்?..
”இதுக்கு முன்பு வந்ததை விட இனி திருடன், டான், கேங்ஸ்டர், போதைப்பொருள் கடத்தல்காரன் கேரக்டர்களில் ரஜினி, கமல் முதல் கார்த்தி, தனுஷ் வரை தொடர்ந்து நடிப்பார்கள்.
இந்த கதைகளை மட்டுமே பார்த்தாக வேண்டுமென்பது தமிழ் சினிமா ரசிகர்களின் தலையெழுத்து.
இதற்கு முக்கிய காரணம்.. Kolar Gold Field யஷ், செம்மரக்கட்டை அல்லு அர்ஜீன் படங்கள் மெகா ஹிட் ஆனதுதான்.
உங்களை போட்டுத்தள்ள வருபவர்கள்:
Japan – Robbery/Heist.
Jigarthandaa 2 – Gangster.
Thug Life – Veteran Gangster.
Surya, Sudha Kongara Film – Gangster.
Rajini, Lokesh Film – Gangster, Drug Peddler.” என ட்வீட் போட்டு இனிமேல் கேங்ஸ்டர் வாரம் என வெறுப்பேற்றி உள்ளார்.
இதையும் படிங்க: உன்ன பாத்தாலே ஏக்கம் எக்குதப்பா எகிறுது!.. டைட் உடையில் ட்ரீட் வைக்கும் நித்தி அகர்வால்!..
என்ன செய்வது, குட் நைட், இறுகப்பற்று போன்ற படங்களை இந்த அளவுக்கு ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று பார்க்காமல் விட்டதன் விளைவு தான் இது என்கின்றனர். அண்ணாத்த, வாரிசு என விஜய், அஜித் எல்லாம் ஃபேமிலி டிராமாவை கையில் எடுத்தால் கலாய்த்து தள்ளினால் அவர்கள் துப்பாக்கி எடுத்து சுடத்தான் செய்வார்கள் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…