கைய குடுங்க சகல!.. ரஜினியை மேடையில் கலாய்த்த ரத்னகுமார்.. ப்ளூ சட்டை மாறன் போட்ட போஸ்ட்டை பாருங்க!

by Saranya M |
கைய குடுங்க சகல!.. ரஜினியை மேடையில் கலாய்த்த ரத்னகுமார்.. ப்ளூ சட்டை மாறன் போட்ட போஸ்ட்டை பாருங்க!
X

லியோ வெற்றி விழா நிகழ்ச்சியில் மேடை ஏறி ரத்னகுமார் பேசியதும் விஜய் ஓடி வந்து கட்டிப்பிடித்து பாராட்டிய தருணங்கள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும், அந்த நிகழ்ச்சியில் ரத்னகுமார் என்ன பேசினார் என்பது குறித்த தகவல்களும் இணையத்தில் கசிந்துள்ளன. ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் ரத்னகுமார் வசமாக சிக்கி விட்டார் என்பதை ப்ளூ சட்டை மாறனும் ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு ஆடை படத்தின் இயக்குநரும் மாஸ்டர் மற்றும் லியோ படங்களின் வசனகர்த்தாவுமான ரத்னகுமாரை வச்சு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: எம்.ஆர்.ராதா நாடகத்தை படமாக்கும் போது நடிகவேளை ஓரங்கட்டிய என்.எஸ்.கே – விளைவு என்ன தெரியுமா?..

நேரு ஸ்டேடியத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற முடியாத சூழலில் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. வெற்றி விழாவை காண வரும் ரசிகர்களிடமும் 10 ஆயிரம் ரூபாய்க்கு பாஸ் விற்பனை செய்யப்பட்டதாக ஒரு பக்கம் சில பெண்கள் எல்லாம் புலம்பித் தீர்த்தனர்.

ஆனால், அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் உள்ளே நடிகர் விஜய் சிங்க நடை போட்டு லியோவாகவே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நடிகர் விஜய் பேச வைத்திருந்த காக்கா - கழுகு கதைக்கு முன்னதாகவே ரத்னகுமார் எவ்வளவு தான் வானத்தில் உயர பறந்தாலும் பசிச்சா கீழ இறங்கி வந்து தான் ஆகவேண்டும் என பேசியதும் அரங்கமே ரத்னகுமாருக்கு பலத்த கரவொலியை எழுப்பியது.

இதையும் படிங்க: காக்கா – கழுகு கதை விஜய்யை எந்தளவுக்கு பாதிச்சிருக்குன்னு பாருங்க!.. வெற்றி விழாவிலும் புலம்பிட்டாரே!..

இந்நிலையில், ரஜினிகாந்தை தாக்கி தான் ரத்னகுமார் பேசியுள்ளார் என்பதை குறிப்பிடும் வகையில் ப்ளூ சட்டை மாறன் கைய குடுங்க சகல என மீம் போட்டு கலாய்த்துள்ளார்.

மேலும், தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜிடம் அந்த ரத்னாவை படம் முடியுற வரை என் கண்ணில் படாமல் பார்த்துக்கோன்னு சொல்லியதாகவும் ட்வீட் போட்டுள்ளார்.

Next Story